இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் போட்டிகள் ஒருவழியாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில் 2 – 1 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி முன்னிலையில் உள்ளதால் தொடரையும் கைப்பற்றியுள்ளனர். இதனை தொடர்ந்து இன்னும் நான்கு தினங்களில் ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இன்னும் சில நாட்களில் தொடங்க போகும் உலகக்கோப்பை போட்டிக்கு அனைத்து அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்திய கிரிக்கெட் அணி கடந்த 5ஆம் தேதி அன்று ஆஸ்திரேலியாவிற்கு வந்தடைந்துள்ளார்.
இந்திய அணி பலம் மற்றும் பலவீனம் :
கடந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளில் இருந்து இந்திய அணியின் பேட்டிங் மிகவும் அதிரடியாக மாறியுள்ளது தான் உண்மை. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் விராட்கோலி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வருகிறார்.

அதுமட்டுமின்றி, சூர்யகுமார் யாதவ் பேட்டிங் அனைத்து அணிகளுக்கு சவாலாக தான் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஏனென்றால், அந்த அளவிற்கு அதிரடியாக விளையாடி கொண்டு வருகிறார். என்னதான் பேட்டிங் வலுவாக இருந்தாலும் இந்திய அணியின் முக்கியமான வீக்னஸ் பவுலிங் தான்.
அதிகப்படியான ரன்களை விட்டுக்கொடுத்து வருகின்றனர். இதனால் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு தலைவலியாக மாறியுள்ளது தான் உண்மை.
இந்திய அணியின் விவரம் :
கடந்த மாதத்தில் ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்க போகும் வீரர்களின் பட்டியலை அறிவித்துள்ளது பிசிசிஐ. அதில் கேப்டன் (ரோஹித் சர்மா), துணை கேப்டன் (கே.எல்.ராகுல்), விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷாப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்டிக் பாண்டிய, ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சஹால், அக்சர் பட்டேல், ஜஸ்பிரிட் பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல், அர்ஷதீப் சிங் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அதுமட்டுமின்றி, முகமத் ஷமி, ஸ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷானி, தீபக் சஹார் போன்ற வீரர்கள் காத்திருப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
பும்ராவிற்கு மாற்று வீரர் யார் ?
தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டி-20 போட்டிகளில் தொடங்கும்போது பும்ராவிற்கு காயம் ஏற்பட்டது. அதனால் அவரால் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டி-20 லீக் போட்டிகளில் இருந்து வெளியேறினார். பின்பு டி-20 உலகக்கோப்பை போட்டியிலும் விளையாட வாய்ப்பு இல்லை என்று பிசிசிஐ உறுதியாக கூறியுள்ளது.
அதனால் பும்ராவிற்கு பதிலாக மாற்று வீரர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதில் முகமத் ஷமி மற்றும் தீபக் சஹார் ஆகிய இருவரில் ஒருவருக்கு தான் நிச்சியமாக இந்திய அணியில் இடம் கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. இதுவரை தீபக் சஹார் மொத்தம் 20 சர்வதேச டி-20 போட்டிகளில் விளையாடி 26 விக்கெட்டையும், முகமத் ஷமி 17 போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார்.

இதில் முகமத் ஷமி -க்கு அனுபவம் பல உள்ளனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியின் நம்பிக்கை வீரராக தீபக் சஹார் விளையாடி வருகிறார். அதுமட்டுமின்றி, சமீபத்தில் நடந்து முடிந்த தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பவுலிங் செய்துள்ளார். பவுலிங் மட்டுமின்றி அவ்வப்போது பேட்டிங் செய்து ரன்களையும் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments