இனி இவரால் தொடக்க வீரராக விளையாடவே முடியாது ; இந்திய அணியின் புதிய தொடக்க வீரர்கள் இவர் தான் ;

0

நியூஸிலாந்து தொடர் : சமீபத்தில் நடந்து முடிந்த டி-20 போட்டிக்கான தொடரில் 1 – 0 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணியும், ஒருநாள் போட்டிக்கான தொடரில் 1 – 0 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணியும் தொடரை வென்றுள்ளனர்.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடர் போட்டிகள் வருகின்ற 4ஆம் தேதியில் இருந்து நடைபெற உள்ளது. அதனால் இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகள் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.சமீபத்தில் தான் பங்களாதேஷ் தொடரில் விளையாட உள்ள வீரர்களில் விவரத்தை வெளியிட்டது பிசிசிஐ.

ஒருநாள் போட்டிக்கான அணி :

ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட்கோலி, ரஜத் படிடர், ஸ்ரேயாஸ் ஐயர், ராகுல் த்ரிப்தி, வாஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல், ஷ்ஹபஸ் அகமத், கே.எல்.ராகுல், ரிஷாப் பண்ட், இஷான் கிஷான், ஷர்டுல் தாகூர்,முகமத் ஷமி, முகமத் சிராஜ், தீபக் சஹார் மற்றும் குல்தீப் சென்.

டெஸ்ட் போட்டிக்கான அணியின் விவரம் :

ரோஹித் சர்மா, உமேஷ் யாதவ், முகமத் சிராஜ், முகமத் ஷமி, ஷர்டுல் தாகூர், குல்தீப் யாதவ், ஸ்ரீகர் பாரத், ரிஷாப் பண்ட்,கே.எல்.ராகுல், அக்சர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஸ்ரேயாஸ் ஐயர், விராட்கோலி, புஜாரா, சுப்மன் கில் போன்ற வீரர்கள் இடம்பெறுள்ளனர்.

இந்திய அணியில் வாய்ப்பை இழக்க போகும் தொடக்க வீரர் :

சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய மற்றும் உலகக்கோப்பை போட்டியில் தொடக்க வீரராக களமிறங்க கே.எல்.ராகுலின் பங்களிப்பு இந்திய அணிக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. குறிப்பாக கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் சர்மாவின் பார்ட்னெர்ஷிப் இந்திய கிரிக்கெட் அணிக்கு பின்னடைவை மட்டுமே ஏற்படுத்தியுள்ளது.

அதனால் இனிவரும் போட்டிகளில் கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று கேட்டால் சந்தேகம் தான். ஏனென்றால் பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான தொடரில் ஷிகர் தவான் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் தான் தொடக்க வீரராக களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

இதனை பற்றி பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வாளரான சப கரீம் கூறுகையில் : ” இந்திய அணியில் கே.எல்.ராகுல் ஒரு கிளாஸி ப்ளேயர். அதனால் தொடக்க வீரரான ஷிகர் தவான் மற்றும் ரோஹித் சர்மாவிற்கு பதிலாக விளையாட கூடிய திறன் உள்ளது. ஒருவேளை கே.எல்.ராகுல் தொடக்க வீரராக வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் பிறகு எந்த இடத்தில் வாய்ப்பு கொடுப்பிங்க ? இதனை உடனடியாக ரோஹித் மற்றும் அணியின் நிர்வாகம் முடிவு செய்ய வேண்டும்.”

“ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் மற்றும் ரிஷாப் பண்ட் போன்ற மூன்று வீரர்களும் அணியில் விளையாடுவது மிகவும் சிரமம் தான். விராட்கோலி 3வதாக பேட்டிங் செய்வார், பிறகு ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கி விளையாடுவார்கள். ஒருவேளை 6வது பவுலிங் தேவை என்றால் நிச்சியமாக ரிஷாப் பண்ட் மற்றும் கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு கிடைக்காது. சமீபத்தில் நடந்து முடிந்த நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ஸ்ரேயாஸ் ஐயரின் பங்களிப்பு இந்திய அணிக்கு உதவியாக இருந்தது.”

“அதனால் 5வது இடத்தில ரிஷாப் பண்ட் மற்றும் 6வது இடத்தில் ஒரு பவுலருக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம். இந்த தொடர் நிச்சியமாக ஷிகர் தவானுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. ஒருவேளை ஷிகர் தவான் மற்றும் ரோஹித் சர்மாவின் பார்ட்னெர்ஷிப் சிறப்பாக அமைந்தால் வருகின்ற ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாட அதிக வாய்ப்புகள் இருக்கும். ஐசிசி போட்டிகளில் ஷிகர் தவானின் பங்களிப்பு சிறப்பாக இருந்துள்ளது. அதனால் தான் இந்திய கிரிக்கெட் அணி அவரை ஆதரித்து வருகின்றனர்.”

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரராக யார் களமிறங்கினால் சிறப்பாக இருக்கும் ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here