HomeTrending Newsவிஹாரி, தாகூர், சுமன் கில்-க்கு பதிலாக இவங்க இருவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் தப்பு இல்லை ;...

விஹாரி, தாகூர், சுமன் கில்-க்கு பதிலாக இவங்க இருவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் தப்பு இல்லை ; முன்னாள் வீரர் விளக்கம் ;

இந்திய அணியின் முன்னாள் வீரரான கர்சன் காவ்ரி இந்திய அணியில் விளையாடி வரும் சுமன் கில், ஷர்டுல் தாகூர், சுமன் கில் போன்ற வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர் விளையாடினால் சிறப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

இப்பொழுது இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி-20, டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஷர்டுல் தாகூர், ஹனுமா விஹாரி மற்றும் சுமன் கில் போன்ற வீரர்கள் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தும் அதனை பெரிய அளவில் பயன்படுத்தவில்லை.

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சுமன் கில் 21, ஹனுமா விஹாரி 31 ரன்களை மட்டுமே அடித்துள்ளனர். அதுமட்டுமின்றி இந்திய கிரிக்கெட் அணியில் ஷர்டுல் தாகூர் அவ்வப்போது சிறப்பாக பேட்டிங் செய்கிறார் என்பதற்காக மட்டுமே ப்ளேயிங் 11ல் இடம்பெற்று வருகிறார்.

ஆனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் தாகூர் 5 ரன்களை மட்டுமே அடித்தார். அதுமட்டுமின்றி வெறும் 1 விக்கெட்டை மட்டுமே கைப்பற்றியுள்ளார். இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான கர்சன் காவ்ரி கூறுகையில் ;

“இனிவரும் போட்டிகளில் ஹனுமா விஹாரி, ஷர்டுல் தாகூர் போன்ற வீரர்களை தாண்டி தான் யோசிக்க வேண்டும். அதிலும் சுமன் கில் சிறந்த வீரர் தான். ஆனால் தொடர்ந்து சிறப்பாக விளையாடுகிறாரா ? அதனால் இந்த மூவருக்கும் போதுமான அளவிற்கு வாய்ப்புகள் கிடைத்தது.”

“அதனால் சர்பர்ரஸ் கான் மற்றும் சூரியகுமார் யாதவ் போன்ற வீரர்கள் நிச்சியமாக விஹாரி மற்றும் சுமன் கில் போன்ற வீரர்களுக்கு மாற்றமாக இருக்கும். டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகளின் ஸ்பேசலிஸ்ட். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவர் விளையாடிய அதிரடியான ஆட்டம் அதற்கு உதாரணம்.”

“அதேபோல தான் சர்பர்ரஸ் கானும் ரஞ்சி கோப்பை போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளார். அதனால் இந்த இருவரும் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பெயர் பட்டியலில் இடம்பெற வேண்டும். இவர்கள் தான் இந்திய அணியின் எதிர்கால நட்சத்திரம். பங்களாதேஷ் அணிக்கு எதிராக அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாட போகிறோம்.”

“அதனால் இந்திய அணியில் இருக்கும் முக்கியமான வீரர்களை வைத்து சிறப்பாக விளையாட வேண்டும் என்று கூறியுள்ளார் காவ்ரி.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img