ஐபிஎல் : கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் ஆனது ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள். பின்பு ரசிகர்களின் ஆதரவை பெற்று சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது ஐபிஎல் போட்டிகள். கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் அன்று ஆரம்பித்தது 14வது சீசன் ஐபிஎல் போட்டிகள்.


29 போட்டிகள் நடந்த முடிந்த நிலையில் சில வீரர்களுக்கு கொரோனா தோற்று ஏற்பட்டது. அதனால் உடனடியாக போட்டிகளை ரத்து செய்தது பிசிசிஐ. மீதமுள்ள போட்டிகள் இன்று முதல் ஐக்கிய அரபு நாட்டில் நடைபெற உள்ளது.
ஐபிஎல் 2021 போட்டிகள் நடைபெற உள்ளதால், முன்னாள் வீரர்கள், பயிற்சியாளர்கள் அவரவர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதேபோல தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக இருக்கும் டேவிட் ஹசி ; சில முக்கியமான தகவலை கூறியுள்ளார்.


அதில் ” கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கல் சுமன் கில் மற்றும் நிதிஷ் ரான ஆகிய இருவரும் அதிரடியான வீரர்கள். அதுமட்டுமின்றி, இவர்கள் இருவரும் இந்திய அணியில் அறிமுகம் ஆகியுள்ளார். இவர்கள் தான் இந்திய கிரிக்கெட் போட்டிகளில் எதிர்காலம்.
ஒருசில போட்டிகளில் மட்டுமில்லை நீண்ட போட்டிகள் இவர்களது ஆட்டம் சிறப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார் டேவிட் ஹசி. இதுவரை 7 போட்டிகளில் விளையாடிய சுமன் கில் 132 ரன்களை அடித்துள்ளார். அதில் அதிகபட்சமாக 43 ரன்களை அடித்துள்ளனர்.


அதேபோல, நிதிஷ் ரான 7 போட்டிகளில் 201 ரன்களை விளாசியுள்ளார். அதில் அதிகபட்சமாக 80 ரன்களை விளாசியுள்ளார். இன்று இரவு துபாய் சர்வதேச மைதானத்தில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளனர்.
இதுவரை இந்த இரு அணிகளும் 31 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் அதிகபட்சமாக 19 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியும் 12 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.