இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கும் இரண்டு இளம் வீரர்கள் ; இனிமேல் வாய்ப்பு கிடைக்குமா ? சந்தேகம் தான் ;

0

இந்திய கிரிக்கெட் அணியில் இப்பொழுதெல்லாம் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை கொடுத்து வருகிறது இந்திய கிரிக்கெட் அணி. ஆமாம், ஐபிஎல் அல்லது உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருகின்றனர்.

அதனால் கொடுக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தினால் மட்டுமே தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட முடியும். ஆனால் ஒரு சிலர் அவ்வப்போது மட்டுமே சிறப்பாக விளையாடி வருவதால் அவர்களுக்கான வாய்ப்பு இந்திய அணியில் கிடைப்பது இல்லை.

அக்சர் பட்டேல், முகமத் ஷமி போன்ற வீரர்களில் அவ்வப்போது தான் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதனால் தான் இந்த ஆண்டு ஆசிய கோப்பை 2022யில் இவர்களுது பெயர் இடம்பெறாமல் போனது. இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் யார் என்ற குழப்பும் எழுந்துள்ளது.

ஏனென்றால் கடந்த 12 டி-20 போட்டிகளில் 7க்கு மேற்பட்ட வீரர்கள் ரோஹித் ஷர்மாவுடம் தொடக்க வீரராக வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் இளம் வீரரான இஷான் கிஷான் கடந்த ஆண்டு மார்ச் 2021 இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது இந்திய அணியில் அறிமுகம் ஆனார்.

மிடில் ஆர்டரில் விளையாடி கொண்டு இருந்த இஷான் கிஷானை தொடக்க வீரராக அறிமுகம் செய்தார் ரோஹித் சர்மா (கேப்டன்). இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக விளையாடிய இஷான் கிஷான் ஒரு சில போட்டிகளில் மட்டுமே சிறப்பாக விளையாடி ரன்களை அடித்துள்ளார்.

ஆனால் தொடர்ச்சியாக விளையாடாத காரணத்தால் இந்திய அணியின் ஓப்பனிங் பார்ட்னெர்ஷிப் வலுவாக இல்லை என்று உணர்ந்தனர். அதுமட்டுமின்றி இந்த ஆண்டு டி-20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற இன்னும் இரு மாதம் தான் உள்ளது. அதனால் அதற்குள் சரியான வீரரை தேர்வு செய்ய வேண்டும் என்று பலருக்கு தொடக்க வீரராக வாய்ப்புகள் வழங்கப்பட்டது.

இதுவரை 13 டி-20 போட்டிகளில் விளையாடி இஷான் கிஷான் நிச்சியமாக இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடுவார் என்று பலர் நினைத்துக்கொண்டு வந்தனர். ஆனால் இந்த ஆண்டு அதாவது இந்த மாதம் இறுதியில் நடைபெற உள்ள ஆசிய கோப்பைக்கான போட்டியிலும் இஷான் கிஷான் இடம்பெறாதது அதிர்ச்சியாக உள்ளது.

அடுத்தது ருதுராஜ் கெய்க்வாட் கடந்த 2021ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் டி-20 போட்டியில் சிறப்பாக விளையாடி அதிக ரன்கள் அடித்த பட்டியலில் முதல் இடத்தை கைப்பற்றினார் ருதுராஜ். அதனால் இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

ஆனால் இஷான் கிஷானுக்கு கொடுத்த அளவிற்கு ருதுராஜ் கெய்க்வாட்-கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்பது தான். அதுமட்டுமின்றி, ருதுராஜ் கெய்க்வாட் அணியில் இடம்பெற்றாலும் ப்ளேயிங் 11ல் அவருக்கான இடம் மட்டும் கிடைக்காது. 2021ஆம் ஆண்டு ஐபிஎல், உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரருக்கு இந்த நிலைமையா ?

இன்னும் சில ஆண்டுகளில் விராட்கோலி, ரோஹித் சர்மா, யுஸ்வேந்திர சஹால், ஷிகர் தவான் போன்ற வீரர்கள் ஓய்வு பெரும் நிலையில் இளம் வீரர்களுக்கு அவ்வப்போது வாய்ப்பு கொடுத்தால் இந்திய அணியின் நிலைமை ஒரே மாதிரியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here