விராட்கோலி, ரோஹித் சர்மா ஆகிய இருவருக்குள் இருக்கும் ஒற்றுமையை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர்…! இவர் சொல்வதும் சரியாக தான் இருக்கிறது ; முழு விவரம் இதோ ;

அட..அட… இன்னுமா விராட்கோலி, ரோஹித் சர்மா பற்றி கருத்து தவறாக தான் சமுகவலைத்தளங்களில் பரவி வருகிறது. இதனை பற்றி பேசியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர்.

சமீபத்தில் தான் இந்திய அணியின் கேப்டன் பதவிக்கு பல சர்ச்சை எழுந்தது. ஐசிசி டி20 உலகக்கோப்பை முடிந்த பிறகு, தான் கேப்டன் பதவியில் இருந்து விலக போவதாக விராட்கோலியே முடிவு செய்து அதன் தகவலையும் பகிர்ந்துள்ளார். அதேபோல, ஐசிசி போட்டிகள் முடிந்த பிறகு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளி கேப்டனாக விராட்கோலியும் டி-20 போட்டிக்கான கேப்டனாக ரோஹித் ஷர்மாவும் பொறுப்பேற்றார்.

ஆனால் பிசிசிஐ -யின் முடிவால் விராட்கோலியிடன் கூட சொல்லாமல் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்தும் வெளியேற்றினார்கள். அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பல குழப்பங்கள் எழுந்தன. இதற்கு பதிலளித்த கங்குலி, நான் விராட்கோலியிடன் டி-20 கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என்று கூறினேன்.

ஆனால் அவர் (விராட்கோலி) தான் கேட்கவே இல்லை என்று பிசிசிஐ கங்குலி கூறினார். ஆனால் சர்ச்சை தொடர்ந்து கொண்டே போனது, இதனை பற்றி பேசிய விராட்கோலி, இல்லை இல்லை நான் டி-20 கேப்டன் பதவியில் இருந்து விலக போவதாக சொல்லும்போது, என்னிடம் யாரும் அப்படி சொல்லவில்லை என்று கூறியுள்ளார் விராட். அதன்பிறகு தான் கங்குலி பொய் பேசியுள்ளார் என்பது தெரிய வந்தது.

இதனை பற்றி பேசிய இந்தியன் அணியின் முன்னாள் வீரரான சேட்டன் சர்மா அளித்த பேட்டியில் ; அவ்வப்போது சில தகவல்கள் வரும் அதனை பார்க்கும்போது சிரிப்பாக தான் இருக்கும். ஆனால் அவர்கள் இருவருக்கும் (விராட்கோலி மற்றும் ரோஹித் சர்மா) இடையே மிகப்பெரிய திட்டம் உள்ளது.

நீங்க என்னுடைய இடத்தில இருந்திருந்தால் நிச்சியமாக இதை பார்த்து ரசித்து கொண்டு இருப்பிங்க. இவங்க இருவரும் ஒரே அணியில் ஒரே குடும்பம் போல தான் விளையாடி வருகின்றனர். ஆனால் இவர்கள் இருவருக்கும் இடையேயான கருத்துக்களை தயவு செய்து விட்டுவிடுங்கள் என்று கூறியுள்ளார் சேட்டன்.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் தான் நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கியது. அதில் 3- 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது இந்திய அணி. இப்பொழுது விராட்கோலி தலைமையிலான இந்திய அணியும் தென்னாபிரிக்கா அணியும் டெஸ்ட் தொடர் போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.

அதில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது இந்திய அணி. நாளை இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.