HomeTrending Newsமூன்றாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்க போகும் இந்திய அணி இதுதான் ; அப்போ வெற்றி உறுதி...

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்க போகும் இந்திய அணி இதுதான் ; அப்போ வெற்றி உறுதி தான் ; உத்தேச அணி விவரம் இதோ ;

நாளை மதியம் 2 மணியளவில் விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், டீன் எல்கர் தலைமையிலான தென்னாபிரிக்கா அணியும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ளனர். இதுவரை நடந்து முடிந்த இரு டெஸ்ட் போட்டிகளில் தலா 1 போட்டியில் இரு அணிகளும் வென்றுள்ளது.

அதனால் 1 – 1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளனர். இறுதியாக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே தொடரை கைப்பற்ற அதிகம் வாய்ப்புள்ளது. ஆனால் தென்னாபிரிக்கா அணி நிச்சியமாக போட்டியை ட்ரா செய்ய தான் நினைப்பார்கள்.

ஏனென்றால் இதுவரை இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் ஒருமுறை கூட தொடரை கைப்பற்றியதே இல்லை. அதனால் இந்த முறையும் இந்திய அணியை தொடரை கைப்பற்ற விடமாட்டார்கள் என்று எதிர்பார்க்க படுகிறது. என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, இந்திய அணியில் யார் இடம்பெற போகிறார்கள் என்று கேள்வியும் எழுகின்றனர். ஏனென்றால் முதல் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது இந்திய கிரிக்கெட் அணி. ஆனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் சரியாகவே ரன்களை கைப்பற்றவில்லை என்பது தான் உண்மை.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விராட்கோலி நிச்சியமாக இடம்பெறுவார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவரது முதுகு தசை பிடித்த காரணத்தால் அவரால் போட்டியில் விளையாட முடியாமல் போனது. அதனால் விராட்கோலி-க்கு பதிலாக விஹாரி இடம்பெற்றார்.

முதல் இன்னிங்ஸ்-ல் 20 ரன்கள், மற்றும் இரண்டாவது இன்னிங்ஸ்-ல் ஆட்டம் இழக்காமல் 40 ரன்களை அடித்துள்ளார். அதனால் நிச்சியமாக விஹாரி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தொடர அதிக வாய்ப்பு உள்ளது. புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவரும் அவ்வப்போது சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் விக்கெட் இழந்துவிடுகின்றனர்.

இவர்களை விட ரிஷாப் பண்ட் இதுவரை நடந்து முடிந்த தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான இரு டெஸ்ட் போட்டிகளிலும் பெரிய அளவில் ரன்களை அடிக்கவில்லை என்பது தான் உண்மை. ஆமாம்..! சமூகவலைத்தளங்களில் புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவரை மட்டுமே விமர்சித்து வரும் ரசிகர்கள் ரிஷாப் பண்ட் பற்றி யாரும் பேசுவதில்லை என்று பல கேள்விகள் எழுகின்றன.

அதனால் ரிஷாப் பண்ட் – க்கு பதிலாக விருத்தாமன் சாகா இடம்பெற்றால் நல்ல மாற்றமாக இருக்கலாம். பின்னர் புஜாரா அல்லது ரஹானே ஆகிய இருவரில் யாராவது ஒருவருக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பெற்றால் சிறப்பான அணியாக அமைய அதிக வாய்ப்புள்ளது.

மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான உத்தேச அணி விவரம் :

கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா அல்லது ரஹானே, விராட்கோலி, விஹாரி அல்லது ஷ்ரேயாஸ் ஐயர், விருத்தமன் சாகா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஷர்டுல் தாகூர், முகமது ஷமி, ஜஸ்பீர்ட் பும்ரா, முகமது சிராஜ்.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வென்று தொடரை கைப்பற்றி சாதனை படைக்குமா ? இந்திய கிரிக்கெட் அணி ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img