இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்க போகும் இந்திய அணி இதுதான் ; அப்போ வெற்றி தான் ; முழு விவரம் இதோ ;

0

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் இந்திய மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டி நாளை மதியம் நடைபெற உள்ளது. அதில் யார் வெற்றி பெற போகிறார்கள் ?

கடந்த ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி வரை முன்னேறி அதில் தோல்வியை பெற்று வருத்தத்துடன் வெளியேறியது இந்திய கிரிக்கெட் அணி. அதனால் டெஸ்ட் போட்டிகளில் மிகவும் கவனமாக விளையாடி வருகிறது. இதுவரை விளையாடிய போட்டிகளின் அடிப்படை வைத்து,

இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிபட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது இந்திய கிரிக்கெட் அணி. அதனால் நாளை நடைபெற உள்ள போட்டி முக்கியமான ஒன்றாக தெரிகிறது. இருப்பினும் நாளை நடைபெற உள்ள போட்டியில் யார் யார் ப்ளேயிங் 11ல் இடம்பெற போகிறார்கள் என்று பல கேள்விகள் எழுந்துள்ளது.

அதில் ரோஹித் சர்மா அணியில் இடம்பெறுவாரா இல்லையா ? என்பது சந்தேகம் தான். ஆமாம், அவருக்கு கொரோனா தொற்று உறுதியான காரணத்தால் அவரை தனிமை படுத்தியுள்ளது பிசிசிஐ. இருப்பினும் ஒருவேளை அவருக்கு நெகட்டிவ் வந்தால் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் உத்தேச பட்டியலின் விவரம் இதோ :

மயங்க் அகர்வால், சுமன் கில், புஜாரா, விராட்கோலி, ரிஷாப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்பிரிட் பும்ரா, முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை ரோஹித் சர்மா இடம்பெறும் பட்சத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் வெளியேற்றப்படாமல்.

சமீபத்தில் தான் இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் போட்டி ட்ராவில் முடிந்துள்ளது. இருப்பினும் பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஸ்ரீகர் பாரத் அணியின் ப்ளேயிங் 11ல் இடம்பெறுவாரா இல்லையா ?

கடந்த சில போட்டிகளாக இந்திய அணியின் நம்பிக்கை நாயகன் ரோஹித் சர்மா மற்றும் விராட்கோலி ஆகிய இருவரும் பெரிய அளவில் விளையாடவில்லை என்பது தான் உண்மை. இதே நிலைமை தொடர்ந்தால் நிச்சியமாக இந்திய அணியில் பல மாற்றங்கள் நடைபெறும் என்பதில் சந்தேகமில்லை.

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் எந்த வீரர்கள் விளையாட வேண்டும் ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here