முக்கியமான ஒரு மாற்றத்துடன் களமிறங்க போகும் இந்திய அணி இதுதான் ; வெற்றி நிச்சியம் ;

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு டெஸ்ட் போட்டிகளுக்கான தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த இரு தொடரிலும் வென்ற இந்திய அணி 2 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளனர்.

இந்திய அணியின் முன்னேற்றம் :

எப்பொழுதும் மற்ற அணிகளுக்கு எதிரான போட்டியில் அவ்வப்போது வெற்றியை கைப்பற்றி வரும் இந்திய, இப்பொழுது அனைத்து விதமான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி தொடர்களை வென்று வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, கடந்த பிப்ரவரி 9ஆம் முதல் சிறப்பாக நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடி வெற்றியை கைப்பற்றி வருகிறது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி.

இருப்பினும் ஒவ்வொரு போட்டிகளில் ஒரு சில மாற்றங்களுடன் விளையாடுவார்கள் இருப்பினும் நாளை நடைபெற உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் யார் யார் விளையாட போகிறார்கள் என்று ரசிகர்கள் இடையே மிகப்பெரிய ஆர்வம் எழுந்துள்ளது.

நிச்சியமாக இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு இருக்காது என்ற தகவல் வெளியாகியுள்ளது. முதல் இரு போட்டிகளிலும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தாத ராகுல் குறைவான ரன்களை அடித்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.

அதுமட்டுமின்றி, துணை கேப்டன் பதவியில் இருந்தும் அவரை வெளியேற்றுள்ளனர். அதனால் கே.எல்.ராகுலுக்கு பதிலாக இளம் வீரரான சுப்மன் கில்-க்கு தான் வாய்ப்பு கிடைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான ப்ளேயிங் 11 :

ரோஹித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, விராட்கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், பாரத், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், முகமத் ஷமி மற்றும் சிராஜ் விளையாட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.