பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் பட்டைய கிளப்ப போகும் 11 பேர் கொண்ட இந்திய வீரர்கள் இவர்கள் தான் ;

0

ஆஸ்திரேலியா : உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் கடந்த 16ஆம் தேதி முதல் நடைபெற தொடங்கியுள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பஞ்சம் இருக்காது. அதுமட்டுமின்றி, நேற்றுடன் 8 அணிகளுக்கு இடையேயான சுற்றுகள் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று முதல் சூப்பர் 12 அணிகளுக்கு இடையேயான போட்டிகள் நடைபெற உள்ளது.

இன்றைய முதல் போட்டியில் நியூஸிலாந்து அணியும், ஆஸ்திரேலியா அணியும் மோத உள்ளனர். இதனை தொடர்ந்து நாளை இரவு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் மோத உள்ளனர்.

எப்பொழுது கிரிக்கெட் விளையாட்டில் மற்ற போட்டிகளை காட்டிலும் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு தான் ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்த்து இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதுமட்டுமின்றி , இறுதியாக ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணியை வென்றுள்ளது பாகிஸ்தான்.

அதனை பழிதீர்க்குமா இந்திய ? கடந்த சில மாதங்களாவே இந்திய அணியின் பங்களிப்பு சிறப்பாக மாறியுள்ளது தான் உண்மை. என்னதான் பேட்டிங் அதிரடியாக விளையாடினாலும் இந்திய அணியின் பவுலிங் சொல்லும் அளவிற்கு இல்லை. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் முன்னணி வீரர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா போன்ற இரு வீரர்கள் காயம் காரணமாக அணியை விட்டு வெளியேறியது இந்திய கிரிக்கெட் அணிக்கு பின்னடைவாக தான் பார்க்கப்படுகிறது.

இருப்பினும் இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் தேர்வாகியுள்ள 15 பேர் கொண்ட வீரர்களின் சிறந்த ப்ளேயிங் 11 வீரர்கள் யார் யார் அணியில் விளையாடுவார்கள் ? என்ற குழப்பம் ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது. ஆனால் இந்த முறை உலகக்கோப்பை போட்டியில் தேர்வாகியுள்ள வீரர்கள் பட்டியலில் இருந்து சுலபமாக ப்ளேயிங் 11 -ஐ கணித்து விட முடியும்.

இந்திய அணியின் உத்தேச ப்ளேயிங் 11 விவரம் :

ஓப்பனிங் பேட்ஸ்மேன் : ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல்.

டாப் ஆர்டர் : விராட்கோலி, சூரியகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக்.

ஆல் – ரவுண்டர் : அக்சர் பட்டேல் மற்றும் ஹர்டிக் பாண்டிய.

பவுலர் : ஹர்ஷல் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், புவனேஸ்வர் குமார் மற்றும் முகமத் ஷமி.

இந்திய அணியின் வீக்னஸ் :

இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து பல போட்டிகளில் குறைவான ரன்கள் வித்தியாசத்தில் அல்லது அதிக ரன்களை விட்டுக்கொடுத்து தான் தோல்வியை பெற்று வருகின்றனர். அதனால் முடிந்தவரை பவுலர்கள் ரன்களை குறைவாக விட்டுக்கொடுத்தால் நிச்சியமாக உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி வெல்ல அதிகப்படியான வாய்ப்பு இருக்கிறது தான் உண்மை.

ஏனென்றால், இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சமீப காலமாக சிறப்பாக விளையாடி ரன்களை குவித்து வருகின்றனர். அதேபோல விராட்கோலியும் ரன்களை அடித்துவிளையாட தொடங்கிவிட்டார். அதனால் இந்திய அணிக்கு கூடுதல் பலமாக மாறியுள்ளது தான் உண்மை.

இந்த முறை பாகிஸ்தான் அணியை மற்றுமின்றி உலகக்கோப்பை 2022 ஐ- வெல்லுமா இந்திய கிரிக்கெட் அணி ? அல்லது வழக்கம் போல லீக் சுற்றில் இருந்து வெளியேறிவிடுமா இந்திய ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here