HomeTrending Newsஎன்னை அனைத்து விதமான போட்டியிலும் விளையாட கூடிய வீரர் என்றார்கள் ; ஆனால் இப்பொழுது வாய்ப்பே...

என்னை அனைத்து விதமான போட்டியிலும் விளையாட கூடிய வீரர் என்றார்கள் ; ஆனால் இப்பொழுது வாய்ப்பே கொடுப்பதில்லை ; இந்திய வீரர் ஓபன் டாக் ;

இந்திய கிரிக்கெட் அணி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்று டி-20 தொடருக்கான போட்டிகளில் விளையாடி வருகின்றனர். அதில் இதுவரை நடந்து முடிந்த போட்டியில் 1 – 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலையில் உள்ளது.

இதனை அடுத்து ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி முதல் நவம்பர் 16 ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.

சமீபத்தில் தான் டி-20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ. அதில் ரோஹித் சர்மா கேப்டனாகவும், கே.எல்.ராகுல் துணை கேப்டனாகவும் வழிநடத்த உள்ளனர். இந்த முறை ஆவது டி-20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுமா ?

இந்திய அணியின் விவரம் :

ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட்கோலி, சூரியகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷாப் பண்ட், தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சஹால், அக்சர் பட்டேல், ஜஸ்பிரிட் பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல், அர்ஷதீப் சிங். மற்றும் காத்திருப்பு பட்டியலில் முகமத் ஷமி, ஸ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷானி மற்றும் தீபக் சஹார் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணியில் காணாமல் போன வேகப்பந்து வீச்சாளர் :

இந்திய கிரிக்கெட் அணி பல வீரர்கள் போட்டிகளில் விளையாடி வருகின்றனர். ஐபிஎல் மற்றும் இந்தியாவில் நடக்கும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு வாய்ப்புகளை கொடுத்து வருகிறது பிசிசிஐ. அதேபோல இப்பொழுது இந்திய அணியில் பல வீரர்கள் இருந்தாலும் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு மட்டுமே தொடர்ந்து வாய்ப்புகளை கொடுத்து வருகிறது இந்திய.

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சிறப்பாக பவுலிங் மற்றும் பேட்டிங் செய்து வந்த ஷர்டுல் தாகூர். ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து எந்த விதமான வாய்ப்பையும் கிடைக்காமல் தவித்து வருகிறார். ஆல் – ரவுண்டராகவும் விளையாடிய ஷர்டுல் தாகூர்-க்கு வாய்ப்பு கிடைப்பது இல்லை.

சமீபத்தில் ஷர்டுல் தாகூர் இதனை பற்றி கூறுகையில் ; “அணியின் நிர்வாகத்திடம் நான் முதலில் பேசியபோது அனைத்து விதமான போட்டிகளில் நான் விளையாட போவதாக சொன்னார்கள். அதனை அவர்கள் என்னிடம் எதிர்பார்த்தார்கள், ஆனால் அதன்பின்பு என்னிடம் பேச அதற்கான நேரம் இல்லை.”

“இப்பொழுதெல்லாம் இந்திய கிரிக்கெட் அணி தொடர்நது விளையாடி வருகிறது. ஒரு சீரியஸ் போட்டிக்கும் மற்றொரு போட்டிக்கும் நான்கு அல்லது ஐந்து நாட்கள் மட்டுமே இடைவெளி உள்ளது. அதனால் யாரும் என்னிடம் உட்கார்ந்து பேச நேரமில்லை. நான் இதுவரை சிறப்பாக பவுலிங் செய்து விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளேன்.”

“கடைசியாக விளையாடிய இரு டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி முக்கியமான விக்கெட்டை கைப்பற்றியுள்ளேன். அதனால் நிச்சியமாக என்னுடைய வாய்ப்புக்காக நான் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறேன். அதனால் மீண்டும் இந்திய அணிக்கு சேவை செய்ய காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார் ஷர்டுல் தாகூர்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img