சீரியஸ் தொடர் போட்டிகள் :
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில் இந்திய அணி 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளனர். இதற்கு முன்னாள் நடைபெற்ற டி-20 போட்டிக்கான தொடரை கைப்பற்றியது இந்திய. அதனால் ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.


இரண்டாவது ஒருநாள் போட்டி :
இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் போட்டியை போல இல்லாமல் சிறப்பாக விளையாடி ரன்களை அடித்தனர். தொடக்கத்தில் இருந்து ஒருவர் பின் ஒருவராக ரன்களை அடிக்க தொடங்கினர்.
அதனால் 49 ஓவர் வரை விளையாடிய இங்கிலாந்து அணி 246 ரன்களை அடித்த நிலையில் அனைத்து விக்கெட்டையும் இழந்தனர். அதில் ஜேசன் ராய் 23, பரிஸ்டோவ் 38, ஜோவ் ரூட் 11, பென் ஸ்டோக்ஸ் 21, மொயின் அலி 47, வில்லே 49 ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளனர்.


பின்பு 247 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய. ஆனால் தொடக்க வீரரான ரோஹித் சர்மா எந்த விதமான ரன்களையும் அடிக்காமல் ஆட்டம் இழந்தார். அதனால் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. போட்டி ஆரம்பிக்கும் முன்பு பேசிய ரோகித் சர்மா சில முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார்.
அதில் “எங்கள் (இந்திய) அணியில் பும்ரா எப்பொழுதும் சிறப்பாக பவுலிங் செய்வார், எந்த விதமான போட்டியாக இருந்தாலும் சரி. எப்படி வேண்டுமானலும் அவரால் பவுலிங் செய்ய முடியும். அவரை (பும்ரா) போன்ற ஒரு வீரர் அணியில் இருப்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயம்.”
“இங்கிலாந்து நாட்டில் பந்து எப்படி வேண்டுமானலும் மாறி செல்லும். அதனை பிடிப்பது சற்று கடினமாக தான் இருக்கும். ஆனால் அதில் ரிஷாப் பண்ட் சிறப்பாக விளையாடியுள்ளார். பும்ரா , ரிஷாப் பண்ட் போன்ற வீரர்கள் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான வீரர்கள் என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.”