தோனி இல்லை…!! இந்திய அணிக்கான கேப்டன்களில் இவர் தான் பெஸ்ட் ; சேவாக் ஓபன் டாக்…!! முழு விவரம் இதோ ;

இந்திய: இந்திய கிரிக்கெட் அணிக்கு இதுவரை பல வீரர்கள் கேப்டனாக இருந்துள்ளார்கள். ஆனால் நம் மனதில் சிலர் மட்டுமே நியாபகம் இருக்கும். அதில் கபில் தேவ், கங்குலி, தோனி மற்றும் விராட்கோலி தான். ஏனென்றால் இவர்கள் இருக்கும்போது தான் கிரிக்கெட் விளையாட்டில் பல சுவாரஷியம் ஏற்பட்டுள்ளது.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரராக சேவாக் ; தோனி மற்றும் சௌரவ் கங்குலி ஆகிய இருவரும் நல்ல இந்திய கேப்டன் தான்.இருவரும் இந்திய அணியின் வளர்ச்சிக்கு மிகவும் பாடுபட்டுள்ளார். ஆனால் முகமத் அஷாருதீன் க்கு பிறகு கங்குலி கேப்டனாக பொறுப்பேற்றார்.

கங்குலி பொறுப்பேற்ற போது இந்திய அணி மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அதனை சமாளித்து இந்திய அணியை சிறப்பாக உருவாக்கினார். அதன்பின்னர் கங்குலியை பின்பற்றி தோனி சிறப்பாக இந்திய அணியை வழிநடத்தி ஐசிசி கோப்பைகளை கைப்பற்றி கொடுத்தார்.

அதனால் இவர்கள் இருவரும் சிறந்த கேப்டன் டான் . அனால் இதில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்றால் நான் கங்குலியை தான் சொல்லுவேன். ஏனென்றால் அவர் தான் தொடக்கத்தில் இருந்து அணியை சிறப்பாக உருவாக்கினார். அதனால் தோனிக்கு அது சாதகமாக மாறிவிட்டது.

அவருக்கு அணியை உருவாக்க அந்த அளவுக்கு கடினமாக இல்லை. ஆனால் இருவரும் சிறந்த கேப்டன் தான், அதில் கங்குலி தான் முதலில் வருவார். இப்பொழுது கங்குலி பிசிசிஐ தலைவராக உள்ளார். அதேபோல தோனி இன்னும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார்.

அதுமட்டுமின்றி, உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு ஆலோசகராக பிசிசிஐ அறிவித்துள்ளது. அதனை யாருமே எதிர்பார்க்கவில்லை. சமீபத்தில் தான் இந்திய அணியில் 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ. அதில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விராட்கோலி தலைமையில், தோனி ஆலோசகராக இருக்க போகின்ற இந்திய அணி இந்தமுறை ஐசிசி டி-20 போட்டிக்கான கோப்பையை வெல்லுமா ?? இல்லையா என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.