இந்த வீரர்கள் மட்டும் சிஎஸ்கே அணியில் இருந்தால் , சிஎஸ்கே அணியை அடிச்சிக்கவே முடியாது..! முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கருது..!

இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் என்றாலே திருவிழா போல நடக்கும் போட்டி தான் ஐபிஎல். கடந்த 2008 ஆம் ஆரம்பித்த ஐபிஎல் போட்டி ரசிகர்களில் வரவேற்பை பெற்று இப்பொழுது எதிர்பார்ப்புக்கு அளவுக்கு இந்த ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வருகின்றது.

கடந்த ஆண்டு கொரோனா தாக்கம் இந்தியாவில் அதிகமாக உள்ளதால் இந்தியாவுக்கு பதிலாக ஐக்கிய அரபு நாட்டில் நடத்த முடிவு செய்தது பிசிசிஐ. ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி இந்தியாவில் தான் நடக்கும் என்றும், முதல் சில போட்டிகளில் ரசிகர்கள் யாரும் அனுமதி இல்லை என்றும் பிசிசிஐ கூறியுள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் 2021, வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்க உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். அதுயெல்லாம் ஒருபக்கம் இருக்க, ஐபிஎல் அணிகளை பற்றியும், அபியேல் வீரர்களை பற்றியும் முன்னாள் இந்திய வீரர்கள் பலர் அவரவர் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

அதேபோல இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கருத்தை கூறியுள்ளார். இந்த பதினோரு பேர் அணியில் இருந்தால் நிச்சியமாக சிஎஸ்கே அணி சிறப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார் ஆகாஷ் சோப்ரா.

ஓப்பனிங் பேட்ஸ்மேனாக ருதுராஜ் மற்றும் டுப்லெஸிஸ். மிடில் ஆர்டர் அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, தோனி. ஆல் -ரவுண்டர் : ஜடேஜா மற்றும் சாம் கரண். பவுலரில் ; கரண் சர்மா, தாகூர், தீபக் சாகர், மற்றும் ஜோஷ் (சிஎஸ்கே அணியில் இருந்து விலகிவிட்டார்). அவருக்கு பதிலாக அணியில் யார் இடம்பெறுவார்கள் என்று குழப்பம் எழுந்துள்ளது. என்று கூறியுள்ளார் ஆகாஷ் சோப்ரா.

சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி அணியின் வீரர்கள் முக்கியம். ஏனென்றால் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு மோசமான தோல்விகளை சந்தித்தது கடந்த ஆண்டு ஐபிஎல் 2020யில். அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் அதனை புரிந்து கொண்டு சிறப்பான அணியை உருவாக்குவார் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டியில் ப்ளே – ஆஃப் சுற்றுக்குள் போகுமா?? கடந்த ஆண்டு போல் இல்லாமல் நல்ல ஒரு காம்பேக் கொடுக்குமா என்று பல கேள்விகள் எழுந்துள்ளது. முதல் போட்டியில் சிஎஸ்கே அணி டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொள்ள போகிறது மும்பை மைதானத்தில்.