இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த போட்டி என்றால் அது ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் தான். கடந்த 2008 ஆம் ஆண்டு இந்தியாவில் ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் தொடங்கியது. ரசிகர்களின் ஆதரவை பெற்று ஆண்டுதோறும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.
ஐபிஎல் போட்டிகளில் உள்ள அணிகளை பெரும்பாலும் பேட்ஸ்மேன் தான் கேப்டனாக வழிநடத்துவார்கள். ஆனால் இதுவரை ஐந்து இந்திய பந்து வீச்சாளர்கள் ஐபிஎல் போட்டிகளை தலைமைதாங்கி வந்துள்ளனர். யார் அது தெரியுமா??? முழு விவரம் இதோ :
ஹர்பஜன் சிங் :
இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் கடந்த 2016ஆம் ஆண்டு சர்வதேச போட்டியில் இருந்து விலகினார். அதன்பிறகு ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகின்றனர். பெரும்பாலும் ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தான் விளையாடி உள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்தி வந்த நிலையில் ஒரு போட்டியில் அவரால் விளையாட முடியவில்லை, அதனால் அவருக்கு பதிலாக ஹர்பஜன் சிங் அந்த போட்டியை சிறப்பான முறையில் வழி நடத்தியுள்ளார்.
ஜாகிர் கான் ;;
இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் வேகப்பந்து வீச்சாளரான ஜாகிர் கான், டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வழிநடத்தியுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு ஜாகிர் கான் , கேப்டனாக ராகுல் டிராவிட் மற்றும் அணியின் உரிமையாளர்களும் பரிந்துரை செய்துள்ளார்.
ரவிச்சந்திரன் அஸ்வின் :
ஐபிஎல் போட்டிகளில் மிகவும் போராடி வெற்றிபெறும் அணிகளில் முக்கியமான அணி தான் பஞ்சாப் கிங்ஸ். சூழல் பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து 2018ஆம் ஆண்டும் ஐபிஎல் ஏலத்தில் வெளியேற்றினார்.
பின்னர் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம்பெற்றார். பின்பு யாரை கேப்டனாக வைக்கலாம் என்று பஞ்சாப் கிங்ஸ் அணி மிகவும் குழப்பத்தில் இருந்த நேரத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெற்றார். அதனால் அவரை கேப்டனாக அறிவித்தனர். ஆனால் அஸ்வின் கேப்டனாக இருந்த 28 போட்டிகளில் வேறும் 12 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளாது குறிப்பிடத்தக்கது.
புவனேஸ்வர் குமார்:
கடந்த 2019ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியில் கென் வில்லியம்சனுக்கு பதிலாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான புவனேஸ்வர் குமார் இருந்துள்ளார். அதில் 6 போட்டிகளை தலைமை தாங்கி வழிநடத்திய புவனேஸ்வர் குமார், 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.