யாருக்கு நடக்குதோ இல்லையே..! விராட்கோலி-க்கு இது நடந்தே ஆக வேண்டும் ; ஆனால் இந்திய அதற்கு ஒப்புதல் கொடுக்குமா ? கவாஸ்கர் பேட்டி ;

0

விராட்கோலி க்கு இது நடக்க வேண்டும். இது மிகவும் முக்கியமான ஒன்று, விராட்கோலிக்கு இந்தியாவில் அதிலும் பெங்களுரில் இது நடக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர் கூறியுள்ளார்.

நேற்று மதியம் இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. அதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். அதில் 202 ரன்களை அடித்துள்ளனர். பின்னர் பேட்டிங் செய்த தென்னாபிரிக்கா அணி 1 விக்கெட் இழந்த நிலையில் 35 ரன்களை அடித்த நிலையில் முதல் நாள் நிறைவு பெற்றது.

இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில், விராட்கோலியின் முதுகு தசை பிடித்துவிட்டது அதனால் அவரால் விளையாட முடியாமல் போனது. அதுமட்டுமின்றி, விராட்கோலிக்கு பதிலாக கே.எல்.ராகுல் இந்திய அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார். இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர் ;

அடுத்த வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டி கேப் டவுன்னில் நடைபெற உள்ளது. அது விராட்கோலி-க்கு 99வது டெஸ்ட் போட்டி. விராட்கோலி க்கு 100வது டெஸ்ட் போட்டி பெங்களூரில் நடைபெற உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் அதிக நாட்களாக விளையாடி வருகிறார். அதனால் அவர் (விராட்கோலி) பெங்களூரில் தான் 100வது டெஸ்ட் போட்டி நடைபெறும். அதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மைதானத்தில் அனுமதித்தால் சிறப்பாக இருக்கும்.

அவருக்கு அது கண்டிப்பாக நடக்க வேண்டிய ஒரு விஷயம், விராட்கோலி மைதானத்திற்கு வரும்போது அனைத்து ரசிகர்களும் நின்று வரவேற்க வேண்டும். அவர் அதற்கு தகுதியானவர் தான், அதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கூறியுள்ளார் கவாஸ்கர். பிப்ரவரி மாதத்தில் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி தான் பெங்களூரில் நடைபெற உள்ளது.

பல போராட்டங்களுக்கு பிறகு டெஸ்ட் போட்டிக்கான கேப்டனாக மட்டும் பொறுப்பேற்றுள்ளார் விராட்கோலி. பின்னர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான கேப்டனாக இருக்கிறார் ரோஹித் சர்மா…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here