பேட்டிங், பௌலிங் ரெண்டுமே வேணாம்.. டீம்ல இருக்கணும்னா இதை மட்டும் பண்ணினா போதும்!! ரவி சாஸ்திரி இருக்கும்போது ஸ்ட்ரிக்ட் ஆர்டர் – உண்மையை வெளியிட்ட ஆர். ஸ்ரீதர்!!

இந்திய வீரர்கள் இதில் சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று ரவிசாஸ்திரி சொல்லிக்கொண்டே இருப்பார் என அவரைப் பற்றி யாரும் அறியாத தகவல்களை கூறியிருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் பீல்டிங் கோச் ஆர் ஸ்ரீதர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்த ரவி சாஸ்திரி பதவிக்காலம், நடந்துமுடிந்த டி-20 உலகக்கோப்பையோடு முடிவுற்றது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்த அவர் எண்ணற்ற இருதரப்பு தொடர்களை வெற்றி பெற்றிருந்தாலும், ஒருமுறை கூட ஐசிசி கோப்பையை வெல்லவில்லை என்ற வருத்தம் இருந்தது.

ரவி சாஸ்திரி மற்றும் விராட் கோலி இருவருக்கும் இடையேயான நட்பு மற்றும் புரிதல் மிக ஆழமானது என பலரும் தெரிவித்திருக்கின்றனர். அதேபோல் இருவரும் வீரர்களின் உடல்நிலை மற்றும் மனநிலை இரண்டிலும் மிகுந்த கவனம் கொண்டவர்களாகவும் இருந்து வந்துள்ளனர்.

வீரர்களின் ஒரு சில செயல்பாடுகளை வைத்து முடிவு செய்யக்கூடாது, தொடர்ந்து சில போட்டிகள் வாய்ப்பளிக்க வேண்டும் என்கிற கொள்கைகளையும் கொண்டிருந்தனர். இந்நிலையில் ரவி சாஸ்திரி இந்திய வீரர்களிடம் பேட்டிங் மற்றும் பௌலிங் இரண்டையும் விட இதை தான் பெரிதும் எதிர்பார்த்தார் என பீல்டிங் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் பேட்டியளித்துள்ளார்.

அவர் கூறுகையில், “ரவி சாஸ்திரி என்னிடம் தொடர்ந்து இதைப் பற்றி பேசிக் கொண்டே இருப்பார். அவர் எதிர்பார்த்தது எல்லாம் வீரர்கள் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் ஒரு போட்டியில் இல்லை என்றாலும் மற்றொரு போட்டியில் சிறப்பாக செயல்பட்டு விடுவர்.

ஆனால் பீல்டிங் என்பது அவ்வளவு எளிதல்ல. ஆகையால் அணியில் இடம்பெறும் 11 வீரர்களும் பீல்டிங்கில் எந்தவித தவறும் செய்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். அதேபோல் கேப்டன் விராத் கோலி, வீரர்கள் பீல்டிங்கில் எந்தவித சமரசமும் செய்து விடக்கூடாது என்கிற கொள்கையில் இருந்தார்.

இவர்கள் இருவருக்குமிடையேயான புரிதல் மிகவும் அதிகமாக இருந்தது. அவர்கள் என்னிடம் இதை மட்டுமே எதிர்பார்த்தனர். நானும் எனது கடமையை நன்கு செய்து வந்தேன். தற்போது இந்திய அணி உடல் நலத்தில் சிறந்த அணியாக காணப்பட காரணம் விராட் கோலி மற்றும் ரவிசாஸ்திரி இருவரும்தான்.

அதேபோல் பீல்டிங்கில் இந்திய அணி திறம்பட செயல்பட்டு வருவதற்கு இவர்கள் இருவரும் திட்டமிட்டது தான் காரணம்.” என்றார். இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, டெஸ்ட் போட்டியில் விளையாடிய இந்திய அணி 4 – 1 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது. இந்த தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு காரணம், மிகவும் மோசமாக பீல்டிங் செய்து தான். அதன்பிறகே இத்தகைய திட்டங்கள் வகுக்கப்பட்டன என ஸ்ரீதர் பகிர்ந்து கொண்டார்.