இந்திய என்னுடைய அணி ; அடுத்த போட்டியில் நிச்சியமாக இவருக்கு வாய்ப்பு கொடுப்பேன் ; ஹர்டிக் பாண்டிய உறுதி ;

நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடர் போட்டிகள் :

கடந்த 18ஆம் தேதி அன்று தொடங்கியது இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடர் போட்டிகள். இதில் மூன்று டி-20 போட்டியிலும், மூன்று ஒருநாள் போட்டியிலும் விளையாட உள்ளனர். சமீபத்தில் தான் டி-20 போட்டிக்கான தொடரில் 1 – 0 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி வென்றுள்ளது.

அதனை அடுத்து இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது முதல் ஒருநாள் போட்டி. இதில் இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவானும், நியூஸிலாந்து அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன் விளையாட உள்ளனர்.

ஹர்டிக் பாண்டிய தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி :

இரு தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்த டி-20 போட்டிக்கான தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்டிக் பாண்டிய தான் மூன்று டி-20 போட்டிக்கான தொடரில் களமிறங்கி விளையாடினர். அதில் 1 – 0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது இந்திய. இருந்தாலும் ஒரு சில வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்று கேப்டன் ஹர்டிக் பாண்டியாவின் கேள்விகள் கேட்கப்பட்டது.

ஆமாம், சரியாக விளையாடாத ஸ்ரேயாஸ் ஐயர்-க்கு மட்டும் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கும் இந்திய கிரிக்கெட் அணி ஏன் ? சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்று பல கேள்விகள் எழுந்தன. சமீபத்தில் தான் இதற்கான பதிலை கூறியுள்ளார் ஹர்டிக் பாண்டிய.

ஹர்டிக் பாண்டிய பேட்டி :

வெளியே இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் என்ன சொன்னாலும், அது எங்களை பாதிக்காது. மோதலில் இது என்னுடைய கிரிக்கெட் டீம். எப்பொழுதும் நானும் பயிற்சியாளரும் தான் அணியை தேர்வு செய்வோம். இன்னும் நிறைய போட்டிகள் நடைபெற உள்ளது. அதனால் மற்ற வீரர்களுக்கும் சரியான வாய்ப்பு கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார் ஹர்டிக் பாண்டிய.

மேலும் சஞ்சு சாம்சன், உம்ரன் மாலிக் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படாத நிலையை பற்றி பேசிய ஹர்டிக் பாண்டிய கூறுகையில் : “இந்த தொடரை போட்டியில் இன்னும் அதிகமான போட்டிகள் நடைபெற்றிருந்தால் நிச்சியமாக அனைத்து வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த டி-20 போட்டிக்கான தொடர் மிகவும் குறுகிய போட்டியாக மாறியது. அதனால் அணியை உடனடியாக மாற்றம் செய்து குழப்பத்தை உருவாக்க வேண்டாம் என்று தான் நான் நினைத்தேன்”.

“சஞ்சு சாம்சன், உம்ரன் மாலிக் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டுமென்று தான் நினைத்தேன். ஆனால் சூழ்நிலை அமையவில்லை. அவர்கள் எப்படி யோசிப்பார்கள் என்று அவர்களுடைய இடத்தில் இருந்து என்னால் உணரமுடிகிறது. நீங்க இந்திய அணியின் இருக்கீங்க, ஆனால் ப்ளேயிங் 11ல் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் அது மிகவும் கவலையான விஷயம் தான். நான் எப்பொழுது அணியில் இருக்கும் சுற்று சூழலை சரியாக வைத்திருக்க வேண்டுமென்று தான் நினைப்பேன்.”

“ஏதாவது சமையத்தில் வீரர்களுக்கு பிரச்சனை அல்லது வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் என்னிடம் வந்து பேசுவார்கள் அல்லது அணியின் பயிற்சியாளர்களிடம் பேசுவது தான் வழக்கம். எனக்கு எப்பொழுதும் அணியில் இருக்கும் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டுமென்று தான் யோசிப்பேன் என்று கூறியுள்ளார் ஹர்டிக் பாண்டிய.”

ரோஹித் சர்மாவிற்கு பிறகு சர்வதேச டி-20 போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்டிக் பாண்டிய-வை கூடிய விரைவில் பிசிசிஐ அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.