இந்திய அணியில் இவர் ஒன்றும் சாதாரணமான வீரர் கிடையாது ; இது ஒன்றும் Candy Crush இல்லை ; இந்திய வீரருக்கு ஆதரவாக பேசிய அக்தர் ;

0

இங்கிலாந்து மற்றும் இந்திய :

கடந்த சில நாட்களாக இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான டி-20, ஒருநாள் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று கொண்டு வருகிறது. அதில் டி-20 தொடரில் 2 – 1 என்ற நிலையில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. அதனை தொடர்ந்து இப்பொழுது ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

அதில் 1 – 1 என்ற சம நிலையில் உள்ளது இரு அணிகளும். அதனால் இன்று மதியம் நடைபெற உள்ள போட்டியில் தான் யார் தொடரை கைப்பற்ற போகிறார்கள் என்பது தெரியும். அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்..! தொடரை கைப்பற்றுமா இந்திய ?

தொடரை கைப்பற்றவில்லை என்றாலும், இந்திய அணியில் இன்றைய போட்டியில் ஆவது இவரது ஆட்டம் சிறப்பாக இருக்குமா ? என்று பல எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. ஆமாம், விராட்கோலி பெயர் தான் இப்பொழுது பேசும் பொருளாக மாறியுள்ளது. ஆமாம், கடந்த சில ஆண்டுகளாக சதம் அடிக்க முடியாமல் திணறிக்கொண்டு வருகிறார் விராட்கோலி.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி-20 போட்டியில் 1, 11 ரன்களையும், ஒருநாள் போட்டியில் 16 ரன்களை மட்டுமே அடித்துள்ளார் விராட்கோலி. இன்று மதியம் நடைபெற போகின்ற இறுதி போட்டியில் ஆவது விராட்கோலி சிறப்பாக விளையாடுவாரா என்று பல எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

விராட்கோலியின் மோசமான போர்மை பற்றி பல அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. அதில் பல கருத்துக்கள் விராட்கோலி-க்கு எதிராக மாறியுள்ளது. இதில் சமீபத்தில் கபில் தேவ் சொன்ன கருத்து பேசும் பொருளாக மாறியது தான் உண்மை. அப்படி இருக்கும் நிலையில் இப்பொழுது பல வீரர்கள் விராட்கோலி-கு ஆதரவாக பேசிக்கொண்டு வருகின்றனர்.

அதில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மற்றும் வேகப்பந்து வீச்சாளரான ஷோயிப் அக்தர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ; ” ஒரு பாகிஸ்தான் வீரராக நான் விராட்கோலி-க்கு ஆதரவாக இருப்பேன். ஏனென்றால் 70 சதம் என்பது அவ்வளவு சுலபம் கிடையாது, இது ஒன்று Candy Crush விளையாட்டு இல்லை.”

“பெரிய பெரிய வீரர்கள் மட்டுமே இந்த ரன்களை அடிக்க முடியும், அதுவும் 70 சதம். இதில் இருந்து மட்டும் விராட்கோலி வெளியே வந்தால் இது முற்றிலும் வேறு மாதிரியாக இருக்கும். விராட்கோலி இன்னும் சில இடங்களில் கவனம் செலுத்தி விளையாட வேண்டியுள்ளது.”

“கேப்டனாக விளையாடியதை பற்றி எண்ணம் முற்றிலுமாக மறக்கப்பட வேண்டும். அப்பொழுது தான் ஒரு பேட்ஸ்மேனாக விளையாட முடியும். ரன்களை அடிக்க முடியவில்லையா ? பரவாயில்லை. மக்கள் உன்னை பற்றி தவறான கருத்துக்களை சொல்கிறார்களா ? பரவாயில்லை.”

“இது போன்ற விஷயங்கள் தான் உங்களை வலுவாக மாற்றும். இன்னும் 30 சதம் அடிக்க வேண்டியுள்ளது. அதிலும் நான் 110 சதம் அடிப்பார் என்று நம்புகிறேன். இன்னும் நீ (விராட்கோலி) இளமையாக தான் உள்ளீர். அதனால் சில நாட்கள் சமூகவலைத்தளங்களில் பயன்படுத்தாமல், விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். மிடில் ஓவரில் நின்று விளையாட வேண்டும் என்று கூறியுள்ளார் ஷோயிப் அக்தர்.”

விராட்கோலி பல முன்னாள் வீரர்கள், மற்ற அணிகளில் இருக்கும் ஜாம்பவங்கள் விராட்கோலி நிச்சியமாக மீண்டும் சிறப்பாக விளையாடுவார் என்று பலர் அவரவர் கருத்துக்களை கூறி வருகின்றனர். கிரிக்கெட் ரசிகர்களே, நீங்க என்ன நினைக்குறீர்கள் ? இனிவரும் போட்டிகளில் விராட்கோலி சிறப்பாக விளையாடுவாரா ? இல்லையா ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here