IPL-குள் CORONA இப்படித்தான் வந்தது…!கண்டுப்பிடிச்சாச்சு …! சும்மா ஒரு பேருக்கு தான் Bio-Bubble Rule -ஆ ?

கடந்த மாதம் ஏப்ரல் 9ஆம் தேதி ஆரம்பித்த ஐபிஎல் 2021 டி-20 லீக் போட்டிகள் சிறப்பான முறையில் ஆரம்பித்தது. ஆனால் பிசிசிஐ எதிர்பார்க்காத வகையில் தீடிரென்று சில வீரர்களுக்கு கொரோனா தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால் பிசிசிஐ போட்டியை ரத்து செய்ய முடிவு செய்தது.

கடந்த மே 4ஆம் தேதி அன்று போட்டி என்.30ல் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் , ஈயின் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மொத இருந்தன. ஆனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சில வீர்ரகளுக்கு உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டது. அதனால் போட்டியை ரத்து செய்தது பிசிசிஐ.

அதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ள பட்டது. அதில் சந்தீப் வாரியர் மற்றும் வருண் சக்ரவத்தி ஆகிய இருவருக்கும் தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் பிசிசிஐ – யின் அதிரடி முடிவால் அனைத்து அணிகளில் உள்ள அனைத்து வீர்ரகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் அமித் மிஸ்ரா, மைக்கல் ஹசி, லட்சுமிபதி பாலாஜி போன்ற வீரர்களுக்கு கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் என்ற முடிவு வந்தவுடன் பிசிசிஐ – யின் அதிரடி முடிவால் ஐபிஎல் 2021 போட்டிகளை பாதியில் நிறுத்தி அனைத்து வீரர்களையும் அவரவர் வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.

சமீபத்தில் பிசிசிஐ , அளித்த பேட்டியில் இப்படித்தான் கொரோனா Bio- Bubble-குள் நுழைந்திருக்க முடியும் என்று கூறியுள்ளனர். தங்குமிடம் ; வீரர்கள் தங்குமிடம் முன்னதாக பதிவு செய்யாமல், அவ்வவ்போது ஏதாவது விடுதியில் வீர்ரகளை தங்க வைத்துள்ளனர்.

பயிற்சி செய்யும்போது ; வீர்ரகள் அவ்வவ்போது மைதானங்களில் பயிற்சி செய்வது வழக்கம், ஆனால் மைதானத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் யாருக்கும் பிசிசிஐ பாதுகாப்பு தரவில்லை. எல்ல ஊழியர்களும், தினம்தோறும் அவரவர் வீட்டுக்கு செண்டு வந்துள்ளனர்.

பயணம் ; இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி இந்தியாவில் என்ற முடிவு செய்த பிசிசிஐ, வெறும் 6 மைதானங்களில் மட்டுமே நடைபெறும் என்று தகவலை வெளியிட்டது. அதனால் அவ்வவ்போது விமானத்தின் மூலம் அந்தந்த மைதானங்களுக்கு செல்ல வேண்டிய உள்ளதால் கொரோனா தோற்று வந்திருக்க கூடும் என்று எதிர்பார்க்க படுகின்றனர்.

போன்ற காரணங்களை கூறியுள்ளது பிசிசிஐ, அதனால் மீதமுள்ள போட்டியை எங்கு எப்பொழுது நடைபெறும் என்று இன்னும் முடிவு செய்யமுடியாமல், மிகப்பெரிய கஷ்டத்தில் உள்ளது பிசிசிஐ. கண்டிப்பாக இன்னும் சில நாட்களில் நல்ல ஒரு முடிவு பிசிசிஐ-யிடம் இருந்து வெளியாகும் என்று எதிர்பார்க்க படுகிறது.