பிசிசிஐ ஒப்பந்தத்தில் டி.நட்ராஜன் இடம்பெறாமல் போனதுக்கு இதுதான் காரணம் …! முழு விவரம் இதோ..!

பிசிசிஐ ஒப்பந்தத்தில் டி.நட்ராஜன் இடம்பெறாமல் போனதுக்கு இதுதான் காரணம் …! முழு விவரம் இதோ..!

கடந்த ஆண்டு ஐபிஎல் டி-20 லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐராபாத் அணியில் அறிமுகம் ஆன நட்ராஜன் அசத்தலான யாக்கர் பந்து வீச்சால் பல கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்துள்ளார். அதுமட்டுமின்றி யாக்கர் மன்னன் என்று ரசிகர்கள் அன்போடு அழைக்கப்பட்டார் தமிழகத்தை சேர்ந்த டி.நட்ராஜன்.

ஐபிஎல் 2020யில் 16 போட்டிகளில் விளையாடிய நட்ராஜன் 16 விக்கெட்டை எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி ஒரு ஓவருக்கு 8.02 என்ற விகிதத்தில் ரன்களை கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு இறுதி ஆஸ்திரேலியா சுற்று பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் நட்ராஜன் இடம் பெற்றார்.

அதற்கு முக்கியமான காரணம் 2020 ஆம் ஐபிஎல் போட்டி தான். அவரது அசத்தலான ஆட்டத்தால் பல விக்கெட்டை எடுத்த நட்ராஜனை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 போட்டியில் பங்கேற்றுள்ளார். அதன்பிறகு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் நட்ராஜனின் பங்களிப்பு முக்கியமாக இருந்துள்ளது.

இப்படி இருக்கும் நிலையில் ஏன் பிசிசிஐ ஒப்பந்தத்தில் டி.நட்ராஜன் இடம்பெறாமல் போனதுக்கு என்ன காரணம் .. சிறப்பான பந்து வீச்சாளர் தான? ஏன் இப்படி செய்தார்கள் , இதில் அரசியல் ஏதாவது இருக்கிறதா என்று பல கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது? அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பிசிசிஐ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில் பிசிசிஐ ஒப்பந்தத்தில் வீரரின் பெயர் இடம்பெற வேண்டும் என்றால் இந்த தகுதி நிச்சியமாக இருக்க வேண்டும்…! அதாவது குறைந்தது 3 டெஸ்ட் போட்டிகள் அல்லது 8 ஒருநாள் போட்டி அல்லது 10 டி-20 போட்டியில் இந்திய அணி சார்பாக விளையாடி இருக்க வேண்டும்.

ஆனால் டி.நட்ராஜன் இதுவரை இந்திய அணிக்காக 1 டெஸ்ட் போட்டிகள், 2 ஒருநாள் போட்டி மற்றும் 4 டி-20 போட்டிகள் மட்டுமே விளையாடியுள்ளார். அதனால் தான் பிசிசிஐ ஒப்பந்தத்தில் டி.நட்ராஜன் இடம்பெறாமல் போனார். இந்திய டெஸ்ட் அணியில் இணைந்த சுமன் கில் 3 டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ளதால் , அவர் பிசிசிஐ ஒப்பந்தத்தில் C- Grade பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.