ஐபிஎல் வீரர்களுக்கு கொரோனா வந்ததற்கு இதுதான் காரணம்..! உண்மையை கூறிய கங்குலி..! முழு விவரம் இதோ..!

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த படி ஐபிஎல் 2021 டி-20 லீக் போட்டிகள் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30வரை நடைபெறும் என்று பிசிசிஐ கூறியுள்ளது. அதன் படி சிறப்பான முறையில் முதல் பாதி போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் கொரோனா காரணமாக பாதியில் நிறுதிவைத்துள்ளனர்.

மீதமுள்ள 31 ஐபிஎல் டி-20 போட்டிகள் நிச்சியமாக மறுபடி நடக்கும் என்று கூறியுள்ளனர். ஆனால் அது எப்போது என்று உறுதியாக சொல்ல முடியவில்லை. எப்படி கொரோனா ஐபிஎல் பெட்டிக்குள் வந்தது என்று கேள்விக்கு பதிலளித்துள்ளார் பிசிசிஐ தலைவர் கங்குலி. சமீபத்தில் அளித்த பேட்டியில் ; சில முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார்.

அதேபோல, கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளதால் ஐக்கிய அரபு நடத்தில் ஐபிஎல் 2020 போட்டியை நடத்த முடிவு செய்துள்ளது பிசிசிஐ. அதேபோல சிறப்பான முறையில் நடந்து முடிந்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் 2021, டி-20இந்தியாவில் தான் நடக்கும் என்றும் அதிவும் 6 மைதானங்களில் மட்டுமே லீக் போட்டிகள் நடக்கும் என்றும் தகவல்கள் வெளியானது.

அதன்படி சிறப்பாக தான் போட்டிகள் நடைபெற்றது, ஆனால் இருந்தாலும் சில வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதற்கு முக்கியமான காரணம், 6 மைதானங்களில் மாறி மாறி விமானத்தில் பயணம் செய்து வருகின்றனர். ஆனால் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு நாட்டில் நடந்த ஐபிஎல் போட்டிகள் , வெறும் 3 மைதானங்களில் மட்டுமே நடந்தது. அதுவும் பஸ்-சில் தான் பயணம் செய்தோம்.

ஒருவேளை, இந்த முறையில் அவ்வப்போது 6 மைதானங்களில் வீரர்கள் விமானத்தின் மூலம் பயணித்து வருகின்றனர். அதனால் தான் கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்க கூடும் என்று பதிலளித்துள்ளார் கங்குலி. மீதமுள்ள ஐபிஎல் 2021, டி-20 போட்டிகள் எப்பொழுது நடக்கும் என்று கேள்விக்கு கங்குலி பதிலளித்துள்ளார்.

அதில் டி-20 உலகக்கோப்பை வருகின்ற அக்டோபர் மாதத்தில் தொடங்க உள்ளது. அதனால் அதற்கு முன்பே போட்டியை நடத்தலாம் என்றும், அதற்க்கான வழிகள் இருக்கிறதா… அல்லது வேறு என்ன செய்யலாம் என்று நாங்கள் இனிமேல் தான் அதனை பற்றி சிந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார் கங்குலி.