HomeTrending Newsஇந்த மாதிரி நடந்தால் எப்படி வெல்ல முடியும் ? இதுதான் தோல்விக்கு முக்கியமான காரணம் ;...

இந்த மாதிரி நடந்தால் எப்படி வெல்ல முடியும் ? இதுதான் தோல்விக்கு முக்கியமான காரணம் ; நிக்கோலஸ் பூரான் பேட்டி ;

இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளும் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. அதிலும் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் 3- 0 என்ற கணக்கில் ஒருநாள் போட்டிக்கான தொடரை கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸ் அணியை வாஷ்-அவுட் செய்துள்ளனர்.

மூன்றாவது ஒருநாள் போட்டியின் விவரம் :

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணிக்கு முதல் மூன்று விக்கெட் விளையாட்டு சிறப்பாக அமைந்தது. இருப்பினும் விளையாடி கொண்டு இருந்த நேரத்தில் மழை பெய்த காரணத்தால் 36 ஓவர் மட்டுமே நடைபெறும் என்று அறிவித்தனர்.

அதன்படி விளையாடிய இந்திய அணி அதிரடியாக ரன்களை குவித்தனர். அகிலும் தொடக்க வீரரான சுமன் கில் சிறப்பாக விளையாடி ரன்களை அடித்து தொம்சம் செய்தார். அதனால் 36 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்த நிலையில் 225 ரன்களை அடித்தது இந்திய.

அதில் அதிகபட்சமாக தவான் 58, சுமன் கில் 98, ஸ்ரேயாஸ் உயர் 4, சூரியகுமார் யாதவ் 8, சஞ்சு சாம்சன் 6 ரன்களையும் அடித்துள்ளனர். பின்பு 226 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தோல்வி தான் காத்திருந்தது.

ஆமாம், மழை பெய்த காரணத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்ஸ்மேன்களால் சரியாக விளையாட முடியாமல் விக்கெட்டை தொடர்ந்து இழந்து கொண்டே இருந்தனர். இறுதிவரை போராடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 26 ஓவர் முடிவில் 10 விக்கெட்டையு இழந்து 137 ரன்களை மட்டுமே அடித்தனர்.

அதனால் 119 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை விளாத்தியுள்ளது இந்திய. அதில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் 22, பிராண்டன் கிங் 42, நிக்கோலஸ் பூரான் 42 ரன்களை அடித்துள்ளனர். போட்டி முடிந்து பிறகு பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக நிக்கோலஸ் பூரான் தொடரை கைப்பற்றாமல் விட்டதை பற்றி பேசியுள்ளார்.

அதில் “இது எங்களுக்கு கொஞ்சம் கடினமாக தான் இருக்கிறது. முதல் இரு போட்டிகளிலும் நாங்கள் சரியான முடிவுகளை எடுத்து தான் விளையாடினோம். எனக்கு தெரிந்து எங்கள் அணி வீரர்கள் அவர்கள் என்ன பெஸ்ட் கொடுக்க முடியுமோ, அதனை கொடுத்துள்ளனர். நாங்கள் குறுகிய காலத்தில் அதிக போட்டிகளில் விளையாடி வருகிறோம்.”

“DLS வந்த காரணத்தால் பேட்டிங் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. நாங்கள் பார்ட்னெர்ஷிப் செய்தோம்..! ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்பது தான் உண்மை. அதுமட்டுமின்றி சில அனுபவம் இல்லாத வீரர்கள் இப்பொழுது தான் ஒருநாள் போட்டி என்றால் என்ன ? எப்படி இருக்கும் என்பதை கற்றுக்கொண்டு வருகின்றனர்.”

“நாளை தொடங்க உள்ள டி-20 போட்டிகளில் நிச்சியமாக நாங்கள் சிறப்பாக விளையாடுவோம் என்று கூறியுள்ளார் நிக்கோலஸ் பூரான்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img