பங்களாதேஷ் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான தொடர் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒருநாள் போட்டிக்கான தொடரில் 2 – 1 என்ற கணக்கில் பங்களாதேஷ் அணி தொடரை வென்றுள்ளனர்.
அதனை அடுத்து இப்பொழுது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றனர். முதல் டெஸ்ட் போட்டியில் 188 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தியுள்ளது இந்திய கிரிக்கெட். அதனால் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி.
முக்கியமான போட்டிகளில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வரும் இந்திய ;
மற்ற நாடுகளுக்கு இடையேயான தொடர் போட்டிகளில் அட்டகாசமாக விளையாடும் இந்திய வீரர்களால் ஐசிசி, ஆசிய கோப்பை போன்ற பல நாடுகள் பங்களிக்கும் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து மோசமான நிலையில் வெளியேறி வருகின்றனர். ஆமாம், இந்த ஆண்டு நடந்து முடிந்த ஆசிய கோப்பையில் சூப்பர் 4 சுற்றில் இருந்தும், டி-20 உலகக்கோப்பை போட்டியில் அரையிறுதி சுற்றில் இருந்தும் வெளியேறியுள்ளது இந்திய.
அதற்கு முக்கியமான காரணம் பவுலிங், பேட்டிங், பீல்டிங் போன்ற பல விஷயங்கள் இருக்கிறது. ஆனால், கேப்டன் ரோஹித் சர்மாவும் ஒரு காரணம் தான் என்று பல ரசிகர்கள் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஐபிஎல் டி-20 போட்டிக்கான தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக விளையாடிய ரோஹித் சர்மா ஐந்து முறை கோப்பையை பெற்று கொடுத்துள்ளார். அதனால், உலகக்கோப்பையை வெல்ல முடியும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.
அதனால் கேப்டன் என்றால் அது தோனி தான் என்று தோனியின் புகழ் மீண்டும் பரவ தொடங்கியது. அதற்கு முக்கியமான காரணம் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மட்டும் தான் அனைத்து விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்றுள்ளது. சமீபத்தில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் பேட்டியளித்த போது தோனியை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். எதற்காக தோனியை கேப்டனாக இந்திய அணி அறிவித்தது என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
கடந்த 2004ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகம் ஆனவர் மகேந்திர சிங் தோனி. பின்னர் வெறும் மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் தோனியை கேப்டனாக அறிவித்தது பிசிசிஐ. அந்த சமையத்தில் சேவாக், யுவ்ராஜ் சிங் போன்ற முன்னணி வீரர்கள் அணியில் இருக்கும் பட்சத்தில் ஏன் ? தோனியை தேர்வு செய்தோம் என்று சச்சின் டெண்டுல்கர் மனம் திறந்து பேசியுள்ளார்.
அதில் ” தோனி விக்கெட் கீப்பராக இருக்கும்போது அவர் பக்கத்தில் தான் எப்பொழுதும் பீல்டிங் செய்வேன். அப்பொழுது போட்டியில் நிலவரத்தை பற்றி அவரிடம் அதிகம் பேசுவது வழக்கம். அப்பொழுது அவர் (தோனி) சொல்லும் பதில் மிகவும் ஆச்சரியப்படும் வகையில் இருக்கும். எப்பொழுது எதிர் அணியின் கேப்டனை காட்டிலும் தோனி கேப்டன்ஷி மிகவும் சிறப்பாக தான் இருக்கும் என்று கூறியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.”