இரு தினங்களுக்கு முன்பு நடந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஈயின் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஈயின் மோர்கன் பவுலிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிரடியாக விளையாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 220 ரன்களை குவித்துள்ளனர். பின்பு 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு முதல் 5 விக்கெட் அடுத்தடுத்து இழந்தால், கொல்கத்தா அணிக்கு தோல்வி நிச்சியம் என்று சிஎஸ்கே நினைத்தது.
அதற்கு எதிர்மாறாக கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன் ஆன்ட்ரே ரசல் மின்னல் போல ரன்களை அடித்த அவர், 22 பந்தில் 54 ரன்களை விளாசினார். பின்னர் எதிர்பாராத விதமாக சாம் கரண் வீசிய பந்தில் அவுட் ஆனார்.
அதன்பின்னர் பெவிலியனுக்கு சென்று ஆன்ட்ரே ரசல் அங்கிருந்த படியில் உட்கார்ந்து பொடியை கவனித்து வந்தார். நான் அவுட் ஆனதுக்கு பிறகு படியில் அதிகம் நேரம் உட்கார்ந்ததற்கு இதுதான் என்று காரணத்தை கூறியுள்ளார் ஆன்ட்ரே ரசல்.
எப்போதும் நான் அவுட் ஆகும்போது எனக்கும் கோவம் தான் ஏற்படும். ஆனால் இந்த முறை எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அதுமட்டுமின்றி நான் எப்படி என்னுடைய மற்ற வீரர்களை சந்திப்பேன் என்று எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.
என்னுடைய வேலை இன்னும் முடியவில்லை,நான் என்னுடைய அணியை வெற்றி பாதைக்கு கொண்டு வர வேண்டும். தீடிரென்று ஆட்டம் இழந்ததால் அதிர்ச்சி ஆகிவிட்டேன் என்று கூறியுள்ளார் ஆன்ட்ரே ரசல். இதுவரை 4 போட்டிகளில் பேட்டிங் செய்த ரசல் 99 ரன்களை அடித்துள்ளார்.
அதில் அதிகபட்சமாக 54 ரன்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளாசியுள்ளார். பவுலிங் செய்த 4 போட்டிகளில் சேர்த்தி 7 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். ஆன்ட்ரே ரசல் அதிரடி வீரர் மட்டுமின்றி மிகச்சிறந்த பவுலர் என்பதில் சந்தேகமில்லை.