HomeTrending Newsஇப்போ புரிகிறதா இவருடைய மாஸ் ? இந்திய அணியின் தோல்விக்கு இதுதான் ஒரே காரணம் ;...

இப்போ புரிகிறதா இவருடைய மாஸ் ? இந்திய அணியின் தோல்விக்கு இதுதான் ஒரே காரணம் ; முன்னாள் வீரர் சரண்தீப் சிங் பேட்டி ;

உலக கிரிக்கெட் அணிகளில் முன்னோடியாக திகழ்ந்து வரும் ஒரே அணிதான். ஆனால் சமீபத்தில் நடந்து முடிந்த போட்டிக்கு பிறகு இந்திய அணிக்கு நேரம் சரியில்லை போல மாறியுள்ளது.

ஆமாம்… தென்னாபிரிக்கா அணிக்கு இடையேயான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது இந்திய. அதில் டெஸ்ட் போட்டியில் ஆவது ஆறுதலாக ஒரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்றது. ஆனால் ஒருநாள் போட்டியில் அனைத்து மூன்று போட்டிகளிலும் தென்னாபிரிக்கா அணி தான் வென்றுள்ளது.

3 – 0 என்ற கணக்கில் இந்திய அணியை வாஷ்அவுட் செய்தனர். அதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் தோல்விக்கு சரியான கேப்டன் இந்திய அணியை வழிநடத்தவில்லை என்ற கேள்வி தான்.

ரோஹித் சர்மா தான் இந்த முறை இந்திய அணியை வழிநடத்திருக்க வேண்டும். ஆனால் அவருக்கு பயிற்சியின் போது கையில் பலமாக அடிபட்டுவிட்டது. அதனால் அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் இந்திய அணியின் கேப்டனாக ஒருநாள் போட்டிகளில் வழிநடத்தினார்.

ஆனால் அதில் ஒரு பயனும் இல்லை. ஒரு கேப்டனாக மட்டுமின்றி ஒரு பேட்ஸ்மேனாக ரன்களையும் அடிக்க தவறிவிட்டார் கே.எல்.ராகுல். இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் பவுலரான சரண்தீப் சிங் அளித்த பேட்டியில் ; முக்கியமான தகவலையும் அவரது கருத்தையும் பகிர்ந்துள்ளார்.

அதில் ” முதல் நாளில் இருந்து இந்திய அணி சிறப்பாக தான் விளையாடி வருகின்றனர், டெஸ்ட் போட்டியில் மட்டுமின்றி ஒருநாள் போட்டியிலும் கூட. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிகவும் மோசமான நிலையில் தோல்வியை பெற்றது. அதனால் வீரர்கள் மட்டும் காரணமில்லை, அதற்கு கேப்டன்ஷியும் காரணம் தான்.

கே.எல்.ராகுல் மிகவும் சாதுவான கேப்டன். அதனால் விராட்கோலி எப்பொழுது அவரது கேப்டன்ஷியில் அணி வீரர்களை உற்சாகப்படுத்தி கொண்டே வழிநடத்துவார். அது போட்டியின் தொடக்கத்தில் இருந்து இறுதி வரை அது எப்பொழுதும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

அது இப்பொழுது காணவில்லை. அதுமட்டுமின்றி, ரவி சாஸ்திரி மற்றும் விராட்கோலி ஆகிய இருவரும் இணைந்து இந்திய அணியை சிறப்பாக கொண்டு சென்றனர். அவர்கள் வழிநடத்திய இந்திய அணி சிறப்பாக வழிநடத்தியது. அந்த வெறியோடு தான் தென்னாபிரிக்கா அணி விளையாடியது. அதனால் தான் அவர்கள் வெற்றியை கைப்பற்றினார்கள் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரரான சரண்தீப் சிங்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img