இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட்கோலி ஒரு மிகப்பெரிய கிரிக்கெட் வீரர் என்பதில் சந்தேகமில்லை. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான சச்சின் சாதனையை முறியடிக்க விராட்கோலியால் தான் முடியும் என்று பல கிரிக்கெட் வீரர்கள் கூறியுள்ளனர்.
இப்பொழுது அதேபோல, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரரான ரஷீத் கான் சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்த காரணத்துக்கு தான் விராட்கோலி வெற்றியை பெற்று கொண்டே வருகிறார். இப்பொழுது இருக்கும் கிரிக்கெட் எதிர்காலத்துக்கு ஒரு முன்னோடியாக உள்ளார் விராட்கோலி.
அவரது கடின உழைப்பும், அவரது அசத்தலான பேட்டிங் முறையும் காண்போரை மெய்சிலிர்க்க வைத்து வருகிறது. அதிலும் இரண்டாவது இந்திய அணி பேட்டிங் செய்தால் போதும் நிச்சியமாக எவ்வளவு ரன்கள் இருந்தாலும் விராட்கோலி அதனை அடிக்க முயற்சி செய்வார்.
அப்படி அவர் முயற்சி செய்வதன் மூலம் இந்திய அணி சுலபமாக ரன்களை அடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விராட்கோலியின் பேட்டிங் செய்யும் அணுகுமுறையை தான் உதாரணமாக கட்டிக்கொண்டு வருகின்றனர்.
ஒருவேளை அங்கு ஏதாவது பேட்ஸ்மேன் இருந்தால், இவர் அவர்களுக்கு பிறகு ஒரு கடினமான சூழ்நிலையில் தான் பேட்டிங் செய்ய வருவார். இப்பொழுது இருக்கும் சில கிரிக்கெட் வீரராகிலுக்கு அவரவர் மேல் சுய நம்பிக்கையே கிடையாது.
அனால் விராட்கோலியிடன் அது மீகவும் அதிகமாகவே இருக்கிறது. அதனால் தான் அவர்கள் தடுமாறுகின்றனர், அதே சமையத்தில் விராட்கோலி அதனை அடித்து மாஸ் காட்டுகிறார் என்று கூறியுள்ளார் ஆப்கானிஸ்தான் வீரரான ரஷீத் கான்.
வருகின்ற ஜூன் 18ஆம் தேதி முதல் ஜூன் 22 ஆம் தேதி வரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெற உள்ளது. அதனால் இப்பொழுது விராட்கோலி மற்றும் சக இந்திய வீரர்கள் அனைவரும் இங்கிலாந்து நாட்டில் உள்ள சவுத்அம்ப்டன் மைதானத்தில் பயிற்சியை தொடங்கியுள்ளனர். வெற்றியை பெற்று கோப்பையை வெல்லுமா இந்திய அணி பொறுத்துதான் பார்க்க வேண்டும் ..!