சஞ்சு சாம்சன்-ஐ வெளியேற்றியதற்கு இதுதான் முக்கியமான காரணம் ; ஷிகர் தவான் ஓபன் டாக் ;

0

ஹாமில்டன் : இன்று காலை 7:00 மணியளவில் தொடங்கிய போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூலண்ட கிரிக்கெட் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் இரண்டாவது டி-20 போட்டியில் மோதின.

முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றுள்ளது நியூஸிலாந்து அணி. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது இந்திய. அதில் தொடக்க வீரரான ஷிகர் தவான் 3 ரன்களை அடித்த நிலையில் விக்கெட்டை இழந்தார் கேப்டன். அதனால் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது.

பின்னர் மழை வந்த காரணத்தால் போட்டியை சில மணி நேரம் நிறுத்திவைத்தனர். அதன்பின்னர் தொடங்கிய போட்டியில் 12.5 ஓவர் வரை விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி 89 ரன்களை அடித்தனர். பின்பு மீண்டும் மழை பெய்த காரணத்தால் போட்டியை முற்றிலுமாக நிறுத்தி எந்த முடிவும் இல்லாமல் போட்டி நின்றுவிட்டது.

அதனால் இப்பொழுது 1 – 0 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி முன்னிலையில் உள்ளனர். நாளை மறுநாள் நடைபெற உள்ள இருந்து ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வென்றால் இந்த ஒருநாள் போட்டிக்கான தொடர் ட்ராவில் முடியும். ஒருவேளை மழை வந்தாலோ, நியூஸிலாந்து அணி வென்றலோ தொடரை நியூஸிலாந்து அணி கைப்பற்று உறுதியாகிவிடும். அதனால் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது இந்திய.

போட்டி முடிந்த பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டனான ஷிகர் தவான் கூறுகையில் : “இது (மழை) நம்ம கையில் எதுவும் இல்லை. முடிந்த வரை பொறுத்து பார்த்தோம், ஆனால் போட்டி நடைபெறவில்லை. அதனால் அடுத்து நடைபெற உள்ள மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு தயாராக வேண்டும். இந்த முறை சிறப்பான தொடக்க ஆட்டம் அமைந்தது. அதுமட்டுமின்றி, சுப்மன் கில் பேட்டிங் மிகவும் அருமையாக இருந்தது.”

“கடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பவுலிங் சற்று மோசமான நிலையில் இருந்தது. அதனால் இந்த முறை 6வதாக ஒரு பவுலர் வேண்டுமென்று முடிவு செய்தோம். அதனால் தான் சஞ்சு சாம்சன்-க்கு பதிலாக தீபக் ஹுடாவை அணியில் மாற்றம் செய்தோம். அதுமட்டுமின்றி, தீபக் சஹாரை தேர்வு செய்ததற்கு முக்கியமான காரணம் அவரால் ஸ்விங் செய்ய முடியும்.”

“இளம் வீரர்களுடன் விளையாடுவது ஆச்சரியமாக தான் இருக்கிறது. ஆனால் இது நல்ல வாய்ப்பாக தான் இருக்கும் என்று நான் நம்புகிறேன். சுப்மன் கில் பேட்டிங், உம்ரன் மாலிக் உடைய பவுலிங் போன்ற விஷயங்கள் சிறப்பாக அமைந்துள்ளது. இதுதான் தான் முன்னேற்றம். ஒரு அணியாக நாங்கள் முடிவு செய்த விசயங்களை செய்ய வேண்டும். அதுதான் முக்கியமான ஒன்று என்று கூறியுள்ளார் ஷிகர் தவான்.”

ரிஷாப் பண்ட் -க்கு தீபக் ஹூடா இடம்பெற்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஏன் ? சஞ்சு சாம்சன்-க்கு மட்டும் தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகிறது ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here