ரிஷாப் பண்ட் -க்கு ஆதரவு கொடுப்பதற்கு முக்கியமான காரணம் இதுதான் ; பயிற்சியாளர் லட்சுமண் ஓபன் டாக் ;

இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதில் டி-20 போட்டிக்கான தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வென்ற நிலையில் இப்பொழுது ஒருநாள் போட்டிக்கான தொடர் முடிவுக்கு வந்துள்ளது.

இதுவரை நடந்த முடிந்த ஒருநாள் போட்டியில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது நியூஸிலாந்து அணி. இந்திய அணியின் தோல்விக்கு முக்கியமான காரணம் மிடில் ஆர்டர் பேட்டிங் மற்றும் மோசமான நிலையில் இருக்கும் பவுலிங் தான். அதனை ஷிகர் தவான் புரிந்து கொள்ளாமல் விளையாடி வருகிறாரா ? என்ற கேள்விகள் எழுந்து வருகிறது. அதுமட்டுமின்றி, மோசமாக விளையாடி வரும் ரிஷாப் பண்ட் -க்கு ஏன் ? தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து கொண்டு இருக்கீங்க ? ஆனால் சஞ்சு சாம்சன்-க்கு வாய்ப்பு இல்லையா ?என்று பல கேள்விகள் எழுந்துள்ளது.

இதனை பற்றி பேசிய ஷிகர் தவான் கூறுகையில் ; முதல் போட்டியில் இந்திய அணியின் பவுலிங் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதனால் தான் 6வது பவுலிங் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைத்த காரணத்தால் தான் சஞ்சு சாம்சன்-க்கு பதிலாக தீபக் ஹூடாவிற்கு வாய்ப்பு கொடுத்தோம் என்று கூறியுள்ளார் தவான்.” இது சரியான முடிவ ?

மேலும் இன்றைய போட்டிக்கு தொடங்கும் முன்பு பேசிய இந்திய அணியின் பயிற்சியாளர் லட்சுமண் கூறுகையில் : “வானிலை பார்த்தால் சற்று அதிர்ச்சியாக இருக்கிறது. ஆனால் நம்பியுடன் விளையாட போகிறோம். ஒரு பயிற்சியாளராக நான் முழு திருப்தியுடன் இருக்கிறேன். அதுமட்டுமின்றி, இளம் வீரர்களுடன் கலந்துரையிடல் செய்வது மிகவும் சந்தோசமாக இருக்கிறது. அனைவரின் ஆசிர்வாதத்தின் படி இந்திய அணியில் திறமையான பல வீரர்கள் இருக்கின்றனர், பெஞ்ச்-லும் சேர்த்து தான் சொல்கிறேன்.”

“ரிஷாப் பண்ட் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் 4வதாக சிறப்பாக தான் விளையாடி வருகிறார். அவர் (ரிஷாப்) இங்கிலாந்து நாட்டில் அடித்த சதம் மிகவும் முக்கியமான ஒன்று. அதனால் அவரை நாம் ஆதரிக்க வேண்டியது மிகவும் முக்கியமான விஷயம் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் பயிற்சியாளர் லட்சுமண்.”

ரிஷாப் பண்ட் -ன் புள்ளிவிவரம் இதோ :

ரிஷாப் பண்ட் இறுதியாக விளையாடிய 10 ஒருநாள் போட்டிகளில் 0, 11, 18, 56, 0, 0, 125,,15, 10, ரன்களை மட்டுமே அடித்துள்ளார். இதில் 125 ரன்களை இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அடித்த ரன்கள். அதுமட்டுமின்றி , இறுதியாக விளையாடிய 10 டி-20 தொடரில் ரிஷாப் பண்ட் : 20, 0, 0, 0, 27, 3, 6, 6, 11 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் ரிஷாப் பண்ட் -ன் பங்களிப்பு நிச்சியமாக இந்திய கிரிக்கெட் அணிக்கு பின்னடைவை தான் ஏற்படுத்தி வருகிறது.

மூன்றாவது ஒருநாள் போட்டியின் விவரம் :

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு சரியான பார்ட்னெஷிப் அமையவில்லை. தொடர்ந்து விக்கெட்டை இழந்து கொண்டே வந்த இந்திய கிரிக்கெட் அணி 47.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்த நிலையில் 219 ரன்களை மட்டுமே அடித்துள்ளனர். இதில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 49, வாஷிங்டன் சுந்தர் 51 ரன்களை அடித்துள்ளனர்.