இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிக்கான தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 2 – 1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளனர். அதனை தொடர்ந்து ஒருநாள் போட்டிக்கான தொடர இன்று முதல் நடைபெற இருக்கிறது.

அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். இருப்பினும் அவ்வப்போது ஒரு சில வீரர்கள் காயம் ஏற்படுகின்ற காரணத்தால் போட்டிகளில் இருந்து வெளியேறி வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஆசிய கோப்பை, உலக கோப்பை போன்ற போட்டிகளில் ரவீந்திர ஜடேஜா, பும்ரா போன்ற முன்னணி வீரர்களுக்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் விளையாட முடியாத நிலை உருவாகியுள்ளது.
அதனால் இந்திய கிரிக்கெட் அணிக்கு நிச்சியமாக பின்னடைவு தான் ஏற்பட்டு இருக்கும். அதுமட்டுமின்றி, அதற்கு ஏற்ப வீரர்களையும் தேர்வு செய்வது சுலபமான விஷயம் கிடையாது. அதனால் இந்திய கிரிக்கெட் அணி பல போட்டிகளில் தோல்வியை பெற்று வருகின்றனர்.

காயம் காரணமாக ஓய்வு எடுத்து வருகும் பும்ரா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாட வாய்ப்பு குறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் அவருக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்ய பிசிசிஐ ஆலோசித்து வருகின்றனர்.
கடந்த 6 மாதங்களில் முக்கியமான வீரர்களுக்கு காயம் ஏற்பட்டு வருகிறது. இதனை பற்றி முன்பே பேசிய பிசிசிஐ புதிய தலைவர் ரோஜர் பின்னி : “இந்திய வீரர்களுக்கு அடிக்கடி காயம் ஏற்படுகிறது அதனை சரி செய்வது தான் முக்கியமான விஷயம் என்று கூறியுள்ளார்.”

அதேபோல இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக் சில முக்கியமான தகவலை கூறியுள்ளார். அதில் “இந்திய கிரிக்கெட் அணியில் எதற்கு பளு தூக்க வேண்டும் ? அதற்கு பதிலாக உடற்பயிற்சி செய்தால் இன்னும் விளையாட்டில் சிறப்பாக விளையாடலாமே.”
“பளு தூக்குதல் நிச்சியமாக உடலுக்கு வலுவை கொடுக்கும். ஆனால் நான், ஆகாஷ் சோப்ரா, தோனி, சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், கங்குலி போன்ற வீரர்கள் விளையாடி கொண்டு இருந்த போது யாருமே ஒரு முறை கூட முதுகுவலி, தொடை தசை பிரச்சனைகள் நடந்ததே கிடையாது.”

“ஆனால் விராட்கோலி கேப்டனான பிறகு பல மாற்றங்கள் இந்திய அணியில் நடைபெற்றுள்ளது. ஆனால் நாங்கள் விளையாடும் போது எந்த விதமான பளு தூக்குதல் போன்ற பயிற்சி செய்தது இல்லை, அப்படி இருந்தும் நாங்கள் விளையாடினோம்.”
“இது வேண்டுமானால் விராட்கோலியின் நடவடிக்கையாக இருக்கலாம். ஆனால், எல்லாரும் விராட்கோலி ஆக முடியாது. அவரவர் உடல் எப்படி இருக்கிறது என்பதை வைத்து தான் பயிற்சிகளை செய்ய வேண்டுமென்று கூறியுள்ளார் சேவாக்.”
0 Comments