அவங்க இருவரும் இப்படி வெறித்தனமாக பேட்டிங் செய்கிறார்கள் ; போட்டியின் தோல்விக்கு இதுதான் முக்கியமான காரணம் ; ரோஹித் சர்மா பேட்டி

0

நேற்று பெர்த் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், தெம்பா பாவும தலைமையிலான தென்னாபிரிக்கா அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணிக்கு தொடக்க ஆட்டம் வழக்கம் போல சிறப்பாக அமையவில்லை. அதிலும் நம்பிக்கை நாயகன் விராட்கோலி விக்கெட்டை இழந்தது பலருக்கு அதிர்ச்சியாக மாறியது. இருப்பினும் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி 6 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் அடித்துள்ளார்.

அதன்பின்பு மற்ற வீரர்கள் யாரும் சொல்லும் அளவிற்கு விளையாடவில்லை. தொடர்ந்து விக்கெட்டை இழந்த இந்திய கிரிக்கெட் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்த நிலையில் 133 ரன்களை அடித்துள்ளனர். அதில் கே.எல்.ராகுல் 9, ரோஹித் சர்மா 14, விராட்கோலி 12, சூர்யகுமார் யாதவ் 68, தீபக் ஹூடா 0, ஹர்டிக் பாண்டிய 2, தினேஷ் கார்த்திக் 6, ரவிச்சந்திரன் அஸ்வின் 7, புவனேஸ்வர் குமார் 4 ரன்களை அடித்துள்ளனர்.

பின்பு 134 ரன்களை அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது தென்னாபிரிக்கா அணி. ஆனால் இந்திய அணியை போலவே மோசமான தொடக்க ஆட்டம் அமைந்தது. தொடர்ந்து விக்கெட்டை இழந்த தென்னாபிரிக்கா அணியால் தொடக்கத்தில் ரன்களை அடிக்க முடியவில்லை.

ஆனால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஐடென் மார்க்ரம் மற்றும் டேவிட் மில்லர் போன்ற இரு வீரர்களும் தொடர்ந்து ரன்களை அடித்தால் தென்னாபிரிக்கா அணிக்கு சாதகமாக மாறியது. இருந்தாலும் மார்க்ரம் ஆட்டம் இழந்த பிறகு தென்னாபிரிக்கா அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது.

ரன்களை அடிக்க முடியாமல் திணறிக்கொண்டு வந்த தென்னாபிரிக்கா அணி 19.4 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்த நிலையில் 137 ரன்களை அடித்து இந்திய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளனர். அதில் ஐடென் மார்க்ரம் 52, டேவிட் மில்லர் 59* ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளனர்.

அதனால் 5 புள்ளிகளுடன் தென்னப்பிரிக்கா அணி புள்ளிபட்டியலில் முதல் இடத்திலும், 4 புள்ளிகளுடன் இந்திய அணி இரண்டாவது இடத்திலும் உள்ளனர். போட்டி முடிந்த பிறகு பேசிய இந்தியா அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தோல்விக்கான காரணத்தை பற்றி கூறியுள்ளார்.

அதில் “பிட்ச் எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் இன்றைய போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் அனைவரும் சிறப்பாக பவுலிங் செய்தனர். அதனால் தான் 133 ரன்களை அடிக்க கூட கடினமாக மாறியது. இருந்தாலும் இன்னும் கொஞ்ச ரன்களை அடித்திருக்க வேண்டும். முடிந்தவரை போராடினோம். “

“ஆனால் இன்றைய போட்டியில் தென்னாபிரிக்கா அணி சிறப்பாக விளையாடினார்கள். அவங்க 10 ஓவரில் 3 விக்கெட்டை இழந்த நிலையில் 40 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனால் நாம் இன்னும் போட்டியில் இருக்கிறோம் என்று தான் நினைத்தேன். ஆனால் மார்க்ரம் மற்றும் டேவிட் மில்லர் ஆகிய இருவரும் சேர்ந்து போட்டியில் வென்றுவிட்டனர்.”

“ஒரு சில இடங்களை பீல்டிங் சரியாக செய்யாதது தான் போட்டியின் தோல்விக்கு முக்கியமான காரணமாக மாறியது. நாங்க சிறப்பாக தான் செயல்படுவோம். ஆனால் ஒரு சில ரன் – அவுட் மிஸ் பண்ணிவிட்டதால் தான் தோல்விக்கு முக்கியமான காரணமாக மாறியது.”

“இறுதியாக நான் சூழல் பந்து வீச்சாளரை பயன்படுத்தலாம் என்று நினைத்தேன். ஆனால் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பவுலிங் செய்து கொண்டு இருந்தனர். ஒருவேளை அந்த நேரத்தில் புதிய பேட்ஸ்மேன் வந்திருந்தால் நிச்சியமாக நான் அஸ்வின்-ஐ பவுலிங் செய்ய வைத்திருப்பேன் என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here