ஐபிஎல் 2021 ; இவர் ஒழுங்கா விளையாடுறது இல்லை… அதனால் தான் ஐபிஎல் அணிகள் மாறிக்கொண்டே போகிறார்…!!

ஐபிஎல் 2021 ; வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30 வரை விறுவிறுப்பான போட்டிகள் நடைபெற போகிறது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோசத்தில் மூழ்கியுள்ளனர். 2008ஆம் ஆண்டு ஆரம்பித்த ஐபிஎல் போட்டி ரசிகர்களின் ஆதரவை பெற்று 13ஆண்டுகள் நடந்து வருகின்றனர்.

தற்போது கொரோனா மீண்டும் இந்தியாவில் அதிகமாக உள்ளதால் பிசிசிஐ சொன்ன படி ஐபிஎல் வீரர்கள் போட்டிகள் ஆரம்பிக்கும் சில நாட்களுக்குள் அணியில் வந்த தனிமை படுத்தி கொள்ள வேண்டும். அதன்பின்னர் கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்தால் அவரை மற்ற வீரர்களுடன் எப்பொழுதும் போல இருக்கலாம்.

ஐபிஎல் போட்டிகள் முடியும் வரை வீரர்களை யாரும் வீட்டுக்கு செல்ல அனுமதி கிடையாது. அதனால் ஐபிஎல் வீரர்கள் அனைவரும் அவரவர் அணியில் இணைந்து தீவிரமான பயிற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் ஐபிஎல் அணிகளை பற்றியும், ஐபிஎல் வீரர்கள் பற்றியும் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பிர் அளித்த பேட்டியில் ; மேக்ஸ்வெல், இதுவரை நிறைய ஐபிஎல் அணிகளுக்காக விளையாடி உள்ளார். இதற்கு காரணம் அவர் சரியாக விளையாடுகிறார் என்று அர்த்தம் இல்லை. அவரது ஆட்டம் இதுவரை போட்டிகளில் சரியாக அவர் வெளிப்படுத்தவில்லை.

அவரது ஆட்டம் சரியாக இருந்தால் அவர் அணி மாறும் அவசியம் இல்லை. அவரது முக்கியமான பங்களிப்பு ஆஸ்திரேலியா அணிக்காகவும், ஸ்டார்ஸ் போன்ற போட்டிகளில் அவரது ஆட்டம் சிறப்பாக இருக்கிறது. ஆனால் அந்த ஆட்டம் ஐபிஎல் போட்டிகளில் பார்ப்பது மிகவும் கடினமாகிவிட்டது. இதுவரை மேக்ஸ்வெல் டெல்லி , பஞ்சாப் மற்றும் மும்பை இண்டிங்ஸ் அணியில் விளையாடி உள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இணைந்துள்ளார். அவரது ஆட்டம் நிலையானதாக இருந்தால் நிச்சயமாக அவர் அணி மாற்றும் தேவை இருக்காது. உதாரணத்துக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அதிரடி வீரர் ஆன்ட்ரே ரசல் மிகவும் சிறப்பான முறையில் விளையாடி கொண்டு வருகிறார். அதனால் அவரை அணியில் இருந்து வெளியேற்ற அணியின் உரிமையாளர்கள் நினைக்கவில்லை.

அதனால் அப்படி தான் மேக்ஸ்வெல் விளையாட வேண்டும். அவர் இந்த ஆண்டு ஐபிஎல் 2021 , பெங்களூர் அணியில் இருக்கிறார். அதனால் 3வது இடத்தில் டிவில்லியர்ஸ் மற்றும் 4வது இடத்தில் மேக்ஸ்வெல் பேட்டிங் செய்தால் நிச்சயமாக நல்ல ஒரு பேட்டிங் பலம் அதிகம் இருக்கும் என்று கூறியுள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கவுதம் கம்பிர்.