விராட்கோலி-க்கு மட்டும் இந்த பிரச்சனை இல்லை ; ரோஹித் -க்கும் இதே பிரச்சனை தான் ; முன்னாள் வீரர் உறுதி ; உண்மைதானோ ?

0

தொடர் போட்டிகள் :

சில தினங்களுக்கு முன்பு தான் இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய 2 – 1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த இந்திய அணி ஒருநாள் மற்றும் டி-20 போட்டிக்கான தொடரை வென்றுள்ளது இந்திய.

அதனை தொடர்ந்து நாளை மறுநாள் முதல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளது. அதில் இந்திய அணி தொடரை கைப்பற்றுமா ? சமீபத்தில் தான் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்ய போகும் ஒருநாள் போட்டிக்கான வீரர்கள் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ.

அதில் ரோஹித் சர்மா, விராட்கோலி, முகமத் ஷமி , பும்ரா போன்ற வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த முறை ஷிகர் தவான் தான் இந்திய அணியின் கேப்டனாக வழிநடத்த போகிறார். இந்த விளையாட்டு மிகவும் முக்கியமான ஒன்று, ஏனென்றால் இதில் யார் சிறப்பாக விளையாடுகிறார் என்பதை வைத்துதான் உலகக்கோப்பை போட்டிக்கான அணியில் தேர்வு செய்யப்படும் என்பது உறுதி.

விராட்கோலி :

கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியா அணியில் அறிமுகம் ஆகி சிறப்பாக விளையாடி வந்தார் விராட்கோலி. பின்பு தோனிக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியை சிறப்பாக வழிநடத்தியுள்ளார். ஆனால் சமீப காலமாக இந்திய அணியில் ய்வது பங்களிப்பு மிகவும் மோசமான நிலையில் தான் உள்ளது.

ஆமாம், கடந்த 2019ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்த பிறகு, விராட்கோலியால் இன்னும் ஒரு முறை கூட சதம் அடிக்க முடியாமல் திணறிக்கொண்டு வருகிறார் என்பது தான் உண்மை. இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விராட்கோலியின் விளையாட்டு மோசமான நிலையில் தான் இருந்தது.

ஆனால் நன்கு கவனித்து பார்த்தால் ரோஹித் ஷர்மாவும் பெரிய அளவில் ரன்களை அடிக்கவில்லை என்பது தான். 3 ஒருநாள் போட்டிகளை விளையாடிய ரோஹித் 93 ரன்களை மட்டுமேஅடித்துள்ளார் அடித்துள்ளார். இதனை பற்றி பேசிய பாகிஸ்தான் முன்னாள் வீரரான சல்மான் பட் ; இது விராட்கோலிக்கு மட்டுமின்றி ரோஹித் ஷர்மாவுக்கும் இதே பிரச்சனை தான் என்று கூறியுள்ளார்.

மேலும் இதை பற்றி பேசிய அவர் (சல்மான் பட்) கூறுகையில் ; “பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாமும் விராட்கோலி ரன்களை அடிப்பதை பார்க்க ஆசைப்படுகிறார். விராட்கோலி ஒரு மிகப்பெரிய வீரர் தான் அதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. ஏனென்றால், எந்த வீரராக இருந்தாலும் பிட்ச் சரியாக இல்லையென்றால் ஆட்டம் இழந்துவிடுவார்கள்.”

“மிகப்பெரிய வீரர் நிச்சயமாக கம்பேக் கொடுப்பார்கள். முன்பு விராட்கோலி சிறப்பாக ரன்களை அடித்த நேரத்தில், நிச்சியமாக விராட்கோலி எப்பொழுதும் இப்படியே விளையாடுவார் என்று கூறினார்கள். ஆனால் இப்பொழுது அவர் இருக்கும் நிலைமை வேறு. அதனால் விராட்கோலியே அவருக்கு ஆதரவாக இருந்து முன்னேறி வர வேண்டும்.”

“விடாது காய் பவுலர்களை எதிர்கொள்வதில் விராட்கோலி-க்கு மட்டும் சிக்கல் இல்லை, ரோஹித் ஷர்மாவுக்கு அதே பிரச்சனை உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த தொடரில் இங்கிலாந்து பவுலர் டாப்லே தான் கிட்டத்தட்ட அதிகமான விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். அதேபோல , கடந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் இடது காய் பவுலர் ஷாஹீன் அப்ரிடி வீசிய பந்து வீச்சில் இந்திய அணி சுருண்டது. அதனால் இந்த விஷயத்தை விராட்கோலி மட்டுமில்லை, ரோஹித் ஷர்மாவும் அதில் ஊன்று என்று கூறியுள்ளார் சல்மான் பட்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here