இந்த அணிக்கு தான் வோர்ல்டு கப்.. பாக்கத்தானே போறீங்க!! அடித்து சொல்லும் முன்னாள் வீரர்!!

0

இந்த அணிதான் வெற்றிபெற்று உலகக் கோப்பையை வெல்லப் போகிறது என ஆணித்தரமாக தனது கருத்தினை பதிவிட்டிருக்கிறார் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன்.

டி20 உலகக் கோப்பை தொடர் இறுதிப் போட்டியை எட்டியுள்ளது. நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி டி20 உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. அதேபோல் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இந்த உலகக் கோப்பையில் இதுவரை தோல்வியே காணாத பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இரு அணிகளும் இதுவரை டி20 உலகக் கோப்பையை வென்றது இல்லை. ஆகையால் இந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நிச்சயம் அனல் பறக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. நியூசிலாந்து அணி 50 ஓவர் உலகக் கோப்பையை நூலிழையில் தவறவிட்டது. இந்தமுறை அது நடக்காமல், போட்டியை வெல்வதற்கு நிச்சயம் யுத்திகளை வைத்திருக்கும். 

அதே நேரம் ஒருநாள் போட்டிகளுக்கான உலக கோப்பையை ஆஸ்திரேலிய அணி ஐந்து முறை வென்று ஆதிக்கம் செலுத்தி வருகிறேது. ஆனால் டி20 உலகக் கோப்பையை ஒருமுறைகூட வென்றதில்லை என நீடித்து வரும் சோகத்தை இம்முறை துடைத்தெறியக் கிடைத்த ஒரு நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொண்டு நிச்சயம் முதல் கோப்பையை வெல்வதற்கு முழு முனைப்புடன் களம் இறங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அனல் பறக்கவிருக்கும் இந்த ஆட்டத்தில், எந்த அணி தனது முதல் கோப்பையை வெல்லும்?? என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது; முன்னாள் வீரர்களுக்கும் விமர்சகர்களும் இருந்து வருகிறது. பலர் தங்களது கணிப்புகளை முன்வைத்து வருகின்றனர். இதற்கு மத்தியில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், இம்முறை யார் கோப்பையை வெல்வர்?? என்பது குறித்த தனது கருத்தை முன்வைத்திருக்கிறார். அவர் அளித்த பேட்டியில்,

“பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என நியூசிலாந்து அணி அனைத்திலும் சிறப்பாக விளங்கினாலும், எனது கணிப்பு ஆஸ்திரேலிய அணி பக்கம்தான். ஏனெனில் இதற்கு முன்னர் இந்த இரு அணிகளும் இறுதிப் போட்டியில் மோதியதை நாம் கண்டிருப்போம். அதில் ஆஸ்திரேலிய அணி எப்படி ஆடியது என்றும் நாம் பார்த்தோம். வாழ்வா? சாவா? போட்டி என்றாலே ஆஸ்திரேலிய அணி நிச்சயம் சிறப்பாக செயல்படும். ஐசிசி தொடர்களில் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிப் போட்டி வரை நெருங்கிவிட்டால் இன்னும் கூடுதல் பலத்துடன் காணப்படும். அதன் வீரர்களும் இப்படியொரு சூழலில் ஆடுவதற்கு பெயர் போனவர்கள்.

துவக்க வீரர் வார்னர் ஐபிஎல் தொடரின்போது தனது மோசமான பார்மில் இருந்தார். ஆனால் தற்போது அவர் அணிக்கு சிறப்பான துவக்கம் கொடுத்து முன்னோக்கி எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார். இதுதான் ஆஸ்திரேலிய அணியின் பலம். எந்த வீரர் எப்போது செயல்படுவர் என கணிக்க இயலாது. பொறுத்திருந்து பாருங்கள் ஆஸ்திரேலிய அணி நிச்சயம் கோப்பையை வெல்லும்.” என தனது கணிப்பை பதிவு செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here