ஐபிஎல் ; கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் ஆனது ஐபிஎல் டி20 லீக் போட்டிகள். அதனால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்ல ஒரு விறுவிறுப்பான போட்டி அமைந்தது. அதனால் ரசிகர்களின் ஆதரவை பெற்று ஆண்டுதோறும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது ஐபிஎல் போட்டிகள்.
இந்த ஆண்டு ஐபிஎல் 2021 கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி அன்று தொடங்கியது. ஆனால் ஐபிஎல் வீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதனால் உடனடியாக அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள பட்டது.
அதில் நெகட்டிவ் என்று வந்த அனைத்து வீரர்களையும் அவரவர் வீட்டுக்கு வழி அனுப்பிவைத்தது பிசிசிஐ. அதுமட்டுமின்றி போட்டிகளை தற்காலிகமாக ரத்து செய்தது பிசிசிஐ. பின்பு நாளை (செப்டெம்பர் 19ஆம் ) சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளனர்.
இதனை பற்றி பேசிய முன்னாள் இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் அளித்த பேட்டியில் ;; ஆச்சரியமாக தான் இருக்கிறது முதல் பாதி விளையாட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மாஸ் காட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி இந்த முறை மும்பை இந்தியன்ஸ் சற்று பின்னடைவு சந்தித்து தான் வருகிறது. இதேநிலை தொடர்ந்தால் நிச்சயமாக மும்பை இந்தியன்ஸ் அணியை சுலபமாக சிஎஸ்கே அணி வென்று விடும்.
முதல் பாதி எப்படி சிஎஸ்கே அணி விளையடினார்களோ…!! அதேபோல மீதமுள்ள போட்டிகளை விளையாடினால் நிச்சியமாக இந்த முறை கோப்பையை வெல்ல தோனிக்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் ஐந்து மாதங்கள் கழித்து இந்த போட்டிகள் மீண்டும் தொடங்க உள்ளது, அதனால் வயதான வீரர்கள் விளையாட கொஞ்சம் போட்டிகள் ஆகும்.
ஒருவேளை அவர்கள் ரெடி ஆக இருந்தால், நிச்சியமாக இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் கோப்பையை வெல்லும் என்பதில் சந்தேகமில்லை என்று கூறியுள்ளார் கெவின் பீட்டர்சன். இதுவரை நடந்த போட்டிகளில் 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியளில் இரண்டாவது இடத்தில் உள்ளது சிஎஸ்கே அணி. ஆனால் 7 போட்டிகள் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 4 போட்டிகளில் வெற்றிபெற்று 4வது இடத்தில் உள்ளது.