மும்பை அணியை வெல்ல போகிறது இந்த அணிதான் ; சந்தேகமே வேண்டாம் ; ப்ராட் ஹோக் ; எந்த அணி தெரியுமா?

0

ஐபிஎல் 2021: கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் ஆனது தான் ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள். பின்பு ரசிகர்களின் ஆதரவை பெற்று ஆண்டுதோறும் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதுவரை 13 சீசன் முடிந்த நிலையில் இப்பொழுது 14வது சீசன் போட்டியில் அடியெடுத்து வைக்கிறது ஐபிஎல்.

அதுமட்டுமின்றி இந்த ஆண்டு ஐபிஎல் டி-20 ஏப்ரல் மாதத்தில் தொடங்கியது. ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக தர்காலிகமாக நிறுத்தி வைத்தது மட்டுமின்றி வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி மீதமுள்ள போட்டிகளை நடத்த முடிவு செய்தது பிசிசிஐ.

அதனால் இப்பொழுது அனைத்து வீரர்களும், பயிற்சியாளர்களுக்கு ஐக்கிய பயிற்சியை செய்து வருகின்றனர். இதனையடுத்து, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் எந்த அணி கோப்பையை வெல்லும் என்று அவரவர் கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதில் ப்ராட் ஹோக் சமீபத்தில் அளித்த பேட்டியில் ; பல முறை கோப்பையை கைப்பற்றிய மும்பை இந்தியன்ஸ் அணியை வென்று இந்த அணிதான் கோப்பையை வெல்லும். இந்தமுறை டெல்லி கேபிட்டல்ஸ் அணிதான் வெல்லும். ஏனென்றால் இப்போவே டெல்லி கேபிட்டல்ஸ் அணி புள்ளிபட்டியலில் உள்ளது.

அதுமட்டுமின்றி, ஸ்ரேயாஸ் மீண்டும் இணைந்துள்ளார், கூடவே சுழல் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய இருவரும் அணியில் இருப்பதால் நிச்சியமாக அது டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு இன்னும் பலம் தான் என்று கூறியுள்ளார் ப்ராட் ஹோக் .

இதுவரை ஐந்து முறை கோப்பையை கைப்பற்றிய மும்பை இந்தியன்ஸ் அணியை ஆறாவது கோப்பையை வாங்க விடாமல் நிறுத்த போவது டெல்லி கேபிட்டல்ஸ் அணிதான். அவரைகளை போன்ற ஒரு சிறந்த வீரரை நான் பார்த்ததே கிடையாது என்று கூறியுள்ளார் ப்ராட் ஹோக் .

இதுவரை 13 சீசன் முடிந்த நிலையில் ; ஐந்து முறை மும்பை இந்தியன்ஸ், மூன்று முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இரண்டு முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜ்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியில் தல ஒருமுறை கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தமுறை ப்ராட் ஹோக் சொன்னது போல,டெல்லி கேபிட்டல்ஸ் அணிதான் கோப்பை வெல்லுமா ? இல்லை வேறு வணிக எது கோப்பையை கைப்பற்ற போகிறார்கள் என்று பொறுத்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here