அதிக விலைக்கு தக்கவைக்கப்பட்ட மூன்று வீரர்கள் இவர்கள் தான் ; முழு விவரம் இதோ ;

ஐபிஎல் 2022 போட்டி நடைபெற இன்னும் நான்கு மாதங்கள் இருந்தாலும், அதனை பற்றி பேச்சு இப்பொழுது இணையத்தை கலக்கி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு முக்கியான காரணம் அடுத்த ஆண்டு ஐபிஎல் 2022யில் புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் போன்ற இரு அணிகள் அறிமுகமாகியுள்ளது.

அதனால் புதிய அணிகளை தவிர்த்து மீதமுள்ள 8 அணிகளும் அதிகபட்சமாக தலா 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்து கொள்ள முடியும் என்று பிசிசிஐ கூறியது. அதனால் யார் யார் அணிகளில் தக்கவைக்கப்பட போகிறார்கள் என்று பல எதிர்பார்ப்புகள் எழுந்தன.

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேற்றுமுன்பு தக்கவைக்கப்பட்ட வீரர்களின் விவரத்தை வெளியிட்டது பிசிசிஐ. அதில் சென்னை சசூப்பர் கிங்ஸ் ; ரவீந்திர ஜடேஜா, மகேந்திர சிங் தோனி, மொயின் அலி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட், மும்பை இந்தியன்ஸ் : ரோஹித் சர்மா, பும்ரா, சூர்யகுமார் யாதவ் மற்றும் பொல்லார்ட் , டெல்லி கேபிட்டல்ஸ் ; ரிஷாப் பண்ட், ப்ரித்வி ஷாவ், அக்சர் பட்டேல் மற்றும் நோர்ட்ஜீ , சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் : கென் வில்லியம்சன், அப்துல் அகமத் மற்றும் உமர் மலிக் , பஞ்சாப் கிங்ஸ்: மயங்க் அகர்வால், அர்ஷதீப் சிங் , ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர் மற்றும் ஜெய்ஸ்வால் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ரசல், சுனில் நரேன், வெங்கடேஷ் ஐயர் மற்றும் வருண் சக்ரவத்தி , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் : விராட்கோலி, க்ளென் மேக்ஸ்வெல் மற்றும் முகமத் சிராஜ் போன்ற வீரர்கள் தக்கவைப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி, இவ்வளவு வீரர்கள் தக்கவைப்பட்டிருந்தாலும், இதில் மூன்று வீரர்கள் மட்டுமே அதிகப்படி விலையான 16 கோடி ரூபாய்க்கு தக்கவைப்பட்டுள்ளனர். யார் அந்த மூன்று வீரர்கள் ?? எந்த அணியை சேர்ந்த முன்று வீரர்கள் ?? முழு விவரம் இதோ ;

பெரும்பாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி தன முதலில் தக்கவைப்படுவார், ஆனால் இந்த முறை ஐபிஎல் 2022 போட்டிக்கான தக்கவைப்பதில் ஆல் – ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா தான் முதல் வீரராக 16 கோடி ரூபாய்க்கு தக்கவைக்கப்பட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் மற்றும் இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனான ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் 16 கோடி ரூபாய்க்கு தக்கவைப்பட்டுள்ளார். பின்னர் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனான ரிஷாப் பண்ட் 16 கோடிக்கு அணியில் தக்கவைப்பட்டுள்ளார்.

இவர்கள் மூன்று வீரர்கள் மட்டுமே அதிகப்படியான விலைக்கு தக்கவைப்பட்டுள்ளார். மீதமுள்ள அணிகள் அனைவரும் 16 கோடி ரூபாய்க்கு கீழ் தான் பயன்படுத்தியுள்ளனர். இவர்கள் மூன்று வீரர்களும் 16 கோடி ரூபாய் கொடுத்து தக்கவைத்தது சரியா ?? தவறா ?? உங்கள் கருத்தை மறக்காமல் COMMENTS பண்ணுங்க..!