அடுத்த ஆண்டு ஐபிஎல் 2022-யில் அம்பதி ராயுடு இந்த மூன்று அணியில் இடம்பெற அதிகம் வாய்ப்புள்ளது..!

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு என்றால் அது ஐபிஎல் போட்டி தான். இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு ஆரம்பித்த ஐபிஎல் டி-20 போட்டி ரசிகர்களின் ஆதரவை பெற்று ஆண்டுதோறும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.

இதுவரை 13 ஐபிஎல் போட்டிகள் முடிந்த நிலையில் இப்பொழுது 14வைத்து ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் பிசிசிஐ சில முக்கியமான தகவலை வெளியிட்டது அதில் அடுத்த ஆண்டு ஐபிஎல் 2022 போட்டியில் புதிதாக இன்னும் 2 அணிகள் ஐபிஎல் போட்டியில் இடம்பெற போவதாக தகவல் வெளியானது.

அப்படி ஒருவேளை நடந்தால் நிச்சயமாக அணைத்து அணியில் வெறும் 3 வீரர்களை மட்டுமே தக்க வைத்துக்கொள்ள முடியும். அதில் ஜடேஜா, தோனி, சாம் கரண் போன்ற வீரர்கள் உள்ளனர். ஆனால் அதிரடியாக விளையாடும் அம்பதி ராயுடு எந்த அணியில் இடம் பெறுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிலும் இந்த மூன்று அணிகளில் விளையாட அதிக வாய்ப்புள்ளது. அதில்

பஞ்சாப் கிங்ஸ் :

பஞ்சாப் கிங்க அணி இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் மிடில் ஆர்டர் சரியாக இல்லாத காரணத்தால் பல போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. அதனால் ஒருவேளை அம்பதி ராயுடு இடம்பெற்றால் பஞ்சாப் அணிக்கு சிறப்பான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருப்பர் என்று எதிர்பார்க்க படுகிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

ஐபிஎல் 2021, 7 போட்டிகளில் விளையாடி வெறும் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றியை கைப்பற்றியுள்ளது கொல்கத்தா. ஓப்பனிங் மற்றும் இறுதியில் விளையாடும் வீரர்கள் அவ்வப்போது சிறப்பாக விளையாடினாலும் மிடில் ஆர்டர் சரியாக அமையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அதனால் அம்பதி ராயுடு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றால், மிடில் ஆர்டர் வலுவாக இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் :

கடந்த இரு ஆண்டுகளாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சரியான ஆட்டத்தை விளையாடவில்லை. 2019ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் 8வது இடத்திலும், 2020ஆம் ஐபிஎல் போட்டியில் 7வைத்து இடத்திலும் இருந்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

இந்த ஆண்டு ஐபிஎல் 2021, இதுவரை 7 போட்டிகளில் விளையாடி வெறும் 3 போட்டியில் மட்டுமே வெற்றியை கைப்பற்றியுள்ளது. இந்த அணியில் இருக்கும் வீரர்கள் புதிதாக இடம்பெற்றவர்கள் தான் அதிகம் உள்ளனர். அனுபவம் வாய்ந்த வீரர்கள் யாரும் இல்லை, ஒருவேளை அம்பதி ராயுடு கிடைத்தால் நிச்சியமாக நல்ல ஒரு மாற்றமாக இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.