சிஎஸ்கே அணியின் பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் இந்த மூன்று அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது…!

அடுத்த ஆண்டு ஐபிஎல் 2022 போட்டிகளில் புதிதாக இரு அணிகள் இடம்பெற போவதாக தகவல் வெளியானது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் ஐபிஎல் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். ஆனால் அதிலும் ஒரு மிகப்பெரிய சிக்கல் உள்ளது.

அது என்னவென்றால் ஒவ்வொரு ஆனாலும் வெறும் மூன்று வீரர்கள் மட்டுமே தக்க வைத்துக்கொள்ள முடியும். அதனால் பெரும்பாலும் வீரர்கள் வெவ்வேறு அணிகளில் இடம்பெறுவார்கள். அதனால் அடுத்த ஆண்டு ஐபிஎல் 2022 போட்டிகளில் பல விறுவிறுப்பான நிகழ்வுகள் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஏலத்தின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கியமான நிறைய வீரர்கள் உள்ளனர். அதனால் நிச்சியமாக ருதுராஜ் கெய்க்வாட் அணியில் இருந்து வெளியேற்ற அதிகம் வாய்ப்புள்ளது. அப்படி ஒருவேளை சிஎஸ்கே அணியில் இருந்து அவர் வெளியேறினால், இந்த மூன்று அணிகளில் இடம் பெற அதிகம் வாய்ப்புள்ளது. அதில்

டெல்லி கேபிட்டல்ஸ் :

இந்த ஆண்டு ஐபிஎல் 2021 டெல்லி கேபிட்டல்ஸ் அணி புள்ளிபட்டியலில் முதல் இடத்தில உள்ளது. அதுமட்டுமின்றி ஓப்பனிங் பேட்ஸ்மேனான ப்ரித்வி ஷாவ் மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவரும் சிறப்பான முறையில் ஓப்பனிங் ஆர்டரில் அதிரடியாக விளையாடி வருகின்றனர்.

ஆனால் 35 வயதான ஷிகர் தவான் இன்னும் ஒரு சில ஐபிஎல் போட்டிகளுக்கு பிறகு ஓய்வு பெற அதிகம் வாய்ப்புள்ளது. அதனால் ருதுராஜ் கெய்க்வாட் அணியில் இருந்தால் ப்ரித்வி ஷாவ் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் பார்ட்னெர்ஷிப் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்க படுகிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

நடைபெற்று வரும் ஐபிஎல் 2021 போட்டிகளில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. அதிலும் ஓப்பனிங் பேட்ஸ்மேன் சரியாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நிதிஷ் ராணா ஒரு சில போட்டிகளில் அதிரடியாக விளையாடி ரன்களை அடித்துள்ளார்.

ஆனால் ராகுல் திருப்பதி சொல்லும் அளவுக்கு ஒன்றும் இல்லை. அதனால் ஒருவேளை மெகா ஏலம் நடைபெற்றால் நிச்சியமாக ராகுல் திருப்பதி அணியில் இருந்து வெளியேற்றப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போதும் ருதுராஜ் மற்றும் சுமன் கில் ஆகிய இருவரும் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இருந்தால் சிறப்பாக இருக்கும்.

சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி:

ஐபிஎல் 2021, சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணிக்கு சாதகமாக அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் வெறும் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதனால் புள்ளிபட்டியலில் இறுதி இடத்தில் உள்ளது.

அதுமட்டுமின்றி தொடர் தோல்வியால், டேவிட் வார்னர் கேப்டன் பதவியில் இருந்து விலகி நியூஸிலாந்து வீரரான கென் வில்லியம்சன் கேப்டன் ஆக பெறுப்பேற்றார். ஒருவேளை இந்திய வீரர்களுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுக்கப்பட்டால் நிச்சியமாக ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக அதனை பயன்படுத்துவர் என்று எதிர்பார்க்க படுகிறது.