HomeTrending Newsவிராட்கோலி-க்கு ஆதரவாக பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ; நெகிழ்ச்சியான பதிவு ;

விராட்கோலி-க்கு ஆதரவாக பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ; நெகிழ்ச்சியான பதிவு ;

இந்திய கிரிக்கெட் அணி ;

சமீப காலமாக கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் வெற்றி அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. ஆமாம், அதற்கு முக்கியமான காரணம் கங்குலி, தோனி, விராட்கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி வருகின்றனர்.

அதனால் புள்ளிபட்டியலில் எப்பொழுதும் டாப் இடத்தில் உள்ளது இந்திய கிரிக்கெட் அணி. இப்பொழுது கூட இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகள் நடைபெற்று கொண்டு வருகிறது. அதில் 2 – 1 என்ற கணக்கில் டி-20 போட்டியில் வென்றது இந்திய.

அதனை தொடர்ந்து இப்பொழுது 1 – 1 என்ற கணக்கில் ஒருநாள் போட்டியில் சம நிலையில் இரு அணிகளும் உள்ளனர். இன்று மதியம் 3:30 மாநிலவில் தொடங்க போகின்ற இறுதி போட்டியில் யார் வெல்கிறார்களோ, அவர்கள் தான் கோப்பையை வெல்ல போகின்றனர்…! தொடரை கைப்பற்றுமா இந்திய?

விராட்கோலி :

இந்திய கிரிக்கெட் அணிக்கு பல பெருமையை பெற்று கொடுத்துள்ளார் விராட்கோலி. கடந்த 2008ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகம் ஆனார் விராட்கோலி. தொடக்கத்தில் பெரிய அளவில் விளையாடவில்லை என்றாலும், இடைப்பட்ட காலத்தில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.

அதுமட்டுமின்றி, சச்சின் மட்டுமே இதுவரை 100 சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். அவருடைய சாதனையை விராட்கோலியால் மட்டுமே முறியடிக்க முடியும் என்று பலர் நினைத்து கொண்டு இருந்தனர். ஆனால் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏனென்றால் சமீப காலமாக கிரிக்கெட் போட்டிகளில் பெரிய அளவில் ரன்களை அடிக்காமல் ஆட்டம் இழந்து கொண்டே வருகிறார் விராட்கோலி.

உதாரணமாக, விராட்கோலி கடந்த 2019ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் அடித்த சதம் தான் இறுதியான ஒன்றாக இன்னும் உள்ளது. அதனை தொடர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரு முறை கூட சதம் அடிக்காமல் திணறிக்கொண்டு வருகிறார்.

அதனால் கிரிக்கெட் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் என அனைவரும் விராட்கோலி பற்றி அவரவர் கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பேசப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில், தான் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் அவரது ட்விட்டர் பக்கத்தில் விராட்கோலி புகைப்படத்தை பகிர்ந்து, “இதுவும் கடந்து போகும், நம்பிக்கையாக இருங்கள்” என்று பதிவு செய்திருந்தார்.

அதற்கு விராட்கோலி, “நன்றி, எப்பொழுது நீ விளையாடில் முன்னேறிக்கொண்டே இரு, வாழ்த்துக்கள் “ என்று விராட்கோலி அதற்கு பதிலளித்துள்ளார். அதுமட்டுமின்றி சமீபத்தில் பாபர் ஆசாம் அளித்த பேட்டியில் ; “ஒரு கிரிக்கெட் வீரராக இந்த மாதிரியான ஒரு சூழ்நிலையை நாம் கடந்து வந்து தான் ஆக வேண்டும்.”

அதுமட்டுமின்றி, இந்த மாதிரியான சூழ்நிலையை யார் கடந்து வருகிறார் என்பது தான் மிகவும் முக்கியமான ஒன்று. இந்த மாதிரியான நேரங்களில் அவருக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும். விராட்கோலி என்றும் சிறந்த வீரர் தான். அவர் பல கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதனால் இதுபோன்ற சூழ்நிலையில் இருந்து எப்படி மேல் வரவேண்டும் என்பது அவருக்கு நன்கு தெரியும் என்று விராட்கோலி-கு ஆதரவாக பேசியுள்ளார் பாபர் அசாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img