HomeTrending Newsஇரு மாற்றங்களுடன் களமிறங்க போகும் இந்திய அணியின் இதுதான் ; ஹாங் காங் அணியுடன் மோத...

இரு மாற்றங்களுடன் களமிறங்க போகும் இந்திய அணியின் இதுதான் ; ஹாங் காங் அணியுடன் மோத போகும் இந்திய அணியின் விவரம் இதோ ;

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த ஆசிய கோப்பை 2022 போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுவரை இரு போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோத உள்ளனர்.

நேற்று முன்தினம் நடந்து முடிந்த இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வென்றது. ஆனால், இந்திய அணியில் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது…!

ஆமாம் தொடக்க வீரரான கே.எல்.ராகுல் கடந்த இரு மாதங்களாக எந்த விதமான போட்டிகளிலும் விளையாடவில்லை. ஆனால் ஆசிய கோப்பி போட்டிக்கான இந்திய அணியில் அவரது பெயர் இடம்பெற்றுள்ளது. அதனால் ஆசிய கோப்பைக்கு முன்பு நடைபெற்ற ஜிம்பாபே அணிக்கு எதிரான தொடரில் கே.எல்.ராகுலை கேப்டனாக நியமனம் செய்தனர்.

ஆனால் ஜிம்பாபே அணிக்கு எதிரான தொடரில் கே.எல்.ராகுல் 1, 30 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அதுமட்டுமின்றி நிச்சியமாக கே.எல்.ராகுல் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் இடம்பெற மாட்டார் என்று பலர் அவரவர் கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

ஆனால் அதிர்ச்சியளிக்கும் வகையில் கே.எல்.ராகுல் பாகிஸ்தான் போட்டியில் இடம்பெற்றார். ஆனால் விளையாடிய முதல் பந்தில் விக்கெட்டை இழந்தது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது. அதனால் இரண்டாவது போட்டியில் நிச்சியமாக கே.எல்.ராகுலை அணியில் வைத்து ரிஸ்க் எடுக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மோசமான ஆட்டத்தை விளையாடினார். 4 ஓவர் பவுலிங் செய்த சஹால் 32 ரன்களை கொடுத்து எந்த விக்கெட்டையும் கைப்பற்றவில்லை. அதற்கு இந்திய அணியின் முன்னணி சுழல் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹாங் காங் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் உத்தேச ப்ளேயிங் 11 விவரம் :

ஓப்பனிங் பேட்ஸ்மேன்: ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் அல்லது ரிஷாப் பண்ட்

மிடில் ஆர்டர்: சூர்யகுமார் யாதவ், விராட்கோலி, தினேஷ் கார்த்திக்

ஆல் – ரவுண்டர்: ஹர்டிக் பாண்டிய, ரவீந்திர ஜடேஜா

பவுலர்கள்: புவனேஸ்வர் குமார், ஆவேஷ் கான், அர்ஷதீப் சிங், யுஸ்வேந்திர சஹால் அல்லது ரவிச்சந்திரன் அஸ்வின்.

உங்கள் ப்ளேயிங் 11 இந்திய அணியில் யார் யார் உள்ளனர் என்பதை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img