இந்திய அணிக்காக விளையாடும் போது இது நிச்சியமாக இருக்க வேண்டிய ஒன்று ; ஹார்டிக் பாண்டிய ஓபன் டாக்…!!

ஐபிஎல் ரசிகர்கள் எதிர்பார்க்கும் படி நாளை மாலை 7:30 மணியளவில் தொடங்க உள்ளது ஐபிஎல் 2021. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோசத்தில் இருக்கின்றனர். இது 14வது ஐபிஎல் சீசன் ஆகும். 2008ஆம் ஆண்டு ஆரம்பித்த ஐபிஎல் போட்டி ரசிகர்கள் ஆதரவை பெற்று விறுவிறுப்பான முறையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

ஐபிஎல் 2021, முதல் போட்டியில் மும்பை இண்டிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோத உள்ளன. இதுவரை இவர்களுக்கு இடையே 27 போட்டிகள் நடந்ததில் 17 போட்டிகளில் மும்பை இண்டிங்ஸ் அணியும், 10 போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வென்றுள்ளது.

சமீபத்தில் மும்பை இண்டிங்ஸ் அனி சார்பில் நடத்தபட்ட பேட்டியில் ; ஹார்டிக் பாண்டிய பல கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இந்திய அணிக்கு மட்டுமின்றி மும்பை இண்டிங்ஸ் அணியின் முக்கியமான வீரர் என்றால் அது ஹார்டிக் பாண்டிய. அவரது அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி மட்டுமின்றி மும்பை இண்டிங்ஸ் அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றுள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் மற்றும் இந்திய அணிக்காக விளையாடும் போது அவர்களது மன ஆரோக்கியம் மிகவும் முக்கியமான ஒன்றை இருக்கிறது. நாம் இந்திய அணியில் விளையாடும் போது நமக்கு அதிக பொறுப்பு ஏற்படும். அது மிகவும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

அதுமட்டுமின்றி இப்பொழுது கொரோனா நாடு முழுவதும் பரவி உள்ளதால். கிரிக்கெட் போட்டிகள் விளையாடும் போது பல கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அதிலும் கொரோனா காரணமாக ஹோட்டல் மற்றும் மைதானத்துக்கு மாறி மாறி போக வேண்டி இருக்கிறது. அதனால் மன அழுத்தம் அதிகமாக இருக்கும். அதனால் அதனை சரியான முறையில் மன ஆரோக்கியத்தை பார்த்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் வீரர் மற்றும் மும்பை இண்டிங்ஸ் அணியின் ஆல்- ரவுண்டர் ஹார்டிக் பாண்டிய.