இதனால் தான் நாங்கள் வெற்றிபெற்று கொண்டு இருக்கிறோம் ; அதற்கு இவர்கள் எல்லாம் தான் காரணம் ; ஸ்டீபன் பிளமிங்

ஐபிஎல் 2021: நேற்று நடைபெற்ற போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேன் வில்லியாம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியும் மோதின. இதுவரை இந்த இரு அணிகளும் 15 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது.

அதில் 11 போட்டிகளில் சிஎஸ்கே அணியும் மற்றும் 4 போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியும் வெற்றிபெற்றுள்ளது. டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 134 ரன்களை விளாசினார்.

பின்பு 135 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 19.4 ஓவர் முடிவில் 139 ரன்களை அடித்து வெற்றியை கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதில் ருதுராஜ் கெய்க்வாட் 45, டூப்ளஸிஸ் 41, மொயின் அலி 17, சுரேஷ் ரெய்னா 2, அம்பதி ராயுடு 17, எம்.எஸ்.தோனி 14 ரன்களை அடித்துள்ளனர்.

வெற்றி பெற்ற சென்னை அணி புள்ளிபட்டியலில் முதல் இடத்திலும், ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திகழ்கிறது. போட்டி முடிந்த பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் அளித்த பேட்டியில் ;

இந்த ஆண்டு நாங்கள் அணியில் சேர்த்த வீரர்கள் தான் மிகவும் முக்கியமான ஒன்று. அதில் மொயின் அலியின் விளையாட்டு மிகவும் அற்புதமாக சிஎஸ்கே அணிக்கு அமைந்துள்ளது. கோப்பை பெறுவது ! பெறாமல் போவது எல்லாம் இரண்டாவது தான்.

நாங்கள் செய்த பிளான் படி நங்கள் விளையாடுகிறோமா இல்லையா என்பதை தான் நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அதுமட்டுமின்றி ப்ராவோ மிகவும் சிறப்பாக பவுலிங் செய்து வருகின்றனர். அதிலும் ப்ராவோ மற்றும் சாம் கரன் ஆகிய இருவரும் ப்ளேயிங் 11ல் இடம்பெற இருவரும் போட்டிபோட்டுக் கொண்டு விளையாடி வருகின்றனர் என்று கூறியுள்ளார் ஸ்டீபன் பிளமிங்.