ஐபிஎல் ஏலத்தில் இவர் இடம்பெற்றால் நிச்சியமாக குறைந்தது 14 கோடிக்கு விலை போவார் ; அஸ்வின் பேட்டி ;

0

ஆசிய கோப்பை போட்டிகள் நேற்று இரவு முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடந்து முடிந்த முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும், இலங்கை அணியும் மோதின. அதில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது. அதுமட்டுமின்றி குரூப் ‘பி’ பிரிவில் முதல் இடத்திலும் உள்ளது ஆப்கானிஸ்தான் அணி.

அதனை தொடர்ந்து இன்று இரவு 7:30 மணியளவில் துபாய் சர்வதேச மைதானத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோத உள்ளனர். இதுவரை இந்த இரு அணிகளும் 8 முறை ஆசிய கோப்பை போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது.

அதில் அதிகபட்சமாக இந்திய அணி 8 முறையும், பாகிஸ்தான் அணி 5 முறையும் வென்றுள்ளனர். அதனால் இன்றைய போட்டி நிச்சியமாக விறுவிறுப்பாக நடைபெறும் என்பதில் சந்தேகமில்லை. இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி என்றால் அது பேசும் பொருளாக மாறுவது வழக்கம் தான்.

அதேபோல தான் இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாகிஸ்தான் வீரரை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். அதில் ” கடந்த முறை ஷதாப் கான் மற்றும் ஹாரிஸ் ரவூப் ஆகிய இருவரும் சிறப்பாக பவுலிங் செய்துள்ளனர். அதிலும் ஷாஹீன் அப்ரிடி உண்மையிலும் அருமையாக பவுலிங் செய்துள்ளார்.”

“நான் பல முறை யோசிப்பேன், ஒருவேளை ஷாஹீன் அப்ரிடி ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தில் இடம்பெற்றால் என்ன நடக்கும் என்று.. ? உயரமான வேகப்பந்து வீச்சாளர் அதுவும் இடது கை, இறுதி ஓவர்களில் சிறப்பாக டெத் பவுலிங் செய்ய கூடிய வீரர் தான் ஷாஹீன் அப்ரிடி. அதனால் குறைந்தது 14 அல்லது 15 கோடி ரூபாய்க்கு விலை போவார்.”

“எனக்கு தெரிந்து பாகிஸ்தான் அணியில் மட்டும் தான் கிட்டத்தட்ட அனைத்து வீரர்களும் குறைந்தது 140 முதல் 145 கிமீ வேகத்தில் பவுலிங் செய்து வருகின்றனர். எனக்கு தெரிந்து உலக கிரிக்கெட் அணிகளில் இவர்கள் (பாகிஸ்தான் கிரிக்கெட்) அணியில் மட்டும் தான் இது நடைபெற்று வருகிறது என்று புகழ்பேசியுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.”

இந்திய மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே எப்பொழுதும் மோதல் இருக்கும். அதனால் தான் ஐபிஎல் போன்ற இந்திய கிரிக்கெட் நடத்தும் போட்டிகளில் பாகிஸ்தான் வீரர்களுக்கு இடமில்லாமல் போனது. கடந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை கைப்பற்றி இந்திய அணியை தோல்விக்கு தள்ளியது ஷாஹீன் அப்ரிடி தான். அதுமட்டுமின்றி காயம் காரணமாக பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அப்ரிடி ஆசிய கோப்பை டி-20 லீக் போட்டிகளில் இருந்து வெளியேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here