கேப்டன் பதவியில் இருந்து வெளியேற்றியதே அணியில் இருந்து தூக்க தான் ; ரசிகர்கள் மகிழ்ச்சி :

இந்தோர் : நாளை காலை 9:30 மணியளவில் தொடங்க உள்ளது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியும் மோத உள்ளனர்.

அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். இதுவரை நடந்து முடிந்த இரு போட்டிகளிலும் இந்திய கிரிக்கெட் அணி வென்று 2 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது இந்திய.

இந்திய அணியின் கேப்டன் தீடிர் விலகல் : ஸ்கெட்ச் ஆ ?

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரராகவும் இந்திய அணியின் துணை கேப்டனாகவும் விளையாடி வருகிறார் கே.எல்.ராகுல். கேப்டனாக இருக்கும் வீரர் சரியாக விளையாடவில்லை என்றால் அவரை அணியில் இருந்து வெளியேற்றுவது அவ்வளவு சுலபமான விஷயம் கிடையாது.

அதேபோல தான் துணை கேப்டனாக கே.எல்.ராகுல் பெரிய அளவில் ரன்களை அடிக்கவில்லை என்றாலும் வாய்ப்பு என்பது தொடர்ந்து வழங்கப்பட்டு தான் வந்தது. ஆனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் கே.எல்.ராகுலின் மோசமான பங்களிப்பு ரசிகர்கள் இடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி, சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்த இளம் வீரரான சுப்மன் கில் அணியில் இருக்கும்போது ஏன் கே.எல்.ராகுலை அணியில் வைத்துள்ளீர்கள் என்று பல கேள்விகள் எழுந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கே.எல்.ராகுலை துணை கேப்டன் பதவியில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.

அதற்கு முக்கியமான காரணம் சுப்மன் கில் அணியில் இடம்பெற வேண்டுமென்ற காரணம் தான். அதனால் நாளை நடக்க போகின்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது…….!

கே.எல்.ராகுல் இறுதியாக விளையாடிய 10 டெஸ்ட் போட்டிகளில் 12, 10, 22, 23, 10, 20, 17, 1 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். இருப்பினும் ரசிகர்கள் இடையே எதிர்ப்புகள் பல எழுந்தாலும் ராகுல் டிராவிட் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் கே.எல்.ராகுலை ஆதரித்து பேசுவது ரசிகர்கள் இடையே சர்ச்சை எழுந்துள்ளது.

இந்திய அணியின் தொடக்க வீரராக கே.எல்.ராகுல் இடம்பெற்றால் அது இந்திய அணிக்கு முன்னேற்றமா ? அல்லது பின்னடைவா ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பண்ணுங்க..!