என்னுடைய ஆசை இதுதான் ; எப்படியாவது இந்தியாவிற்கு இதை செய்ய வேண்டும் ; ஷிகர் தவான் உறுதி ;

0

இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு எதிரான டி-20 போட்டிக்கான தொடர் நடைபெற்று நடந்து முடிந்த நிலையில் இன்று மதியம் முதல் ஒருநாள் போட்டிக்கான தொடர் நடைபெற உள்ளது. அதில் தெம்பா பவுமா தலைமையில் தென்னாபிரிக்கா அணியும், ஷிகர் தவான் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணியும் மோத உள்ளனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த டி-20 போட்டிக்கான தொடரில் 2 – 1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றிய நிலையில் ஒருநாள் போட்டிக்கான தொடரையும் இந்திய அணி வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளதால் விறுவிறுப்பான தொடருக்கு நிச்சியமாக பஞ்சம் இருக்காது.

டி-20 உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்க போகும் இந்திய அணி :

ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட்கோலி, அர்ஷதீப் சிங், ஹர்ஷல் பட்டேல், புவனேஸ்வர் குமார், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, அக்சர் பட்டேல், யுஸ்வேந்திர சஹால்,தினேஷ் கார்த்திக், ரிஷாப் பண்ட், ஹர்டிக் பாண்டிய, ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணியின் தொடக்க வீரர் உறுதி :

இந்திய அணியின் தொடக்க வீரராக திகழும் ஷிகர் தவான் சமீப காலமாக டி-20 போட்டிகளில் பெரிய அளவில் ரன்களை அடிப்பது இல்லை. குறைந்தது ஐபிஎல் தொடரில் ஆவது சிறப்பாக விளையாடிருந்தால் நிச்சியமாக சர்வதேச போட்டிகளில் வாய்ப்பு கிடைத்திருக்கும். அதுமட்டுமின்றி அவ்வப்போது வாய்ப்புகள் கொடுத்ததும் எந்த பலனும் இல்லாமல் போய்விட்டது.

ஆனால் 36 வயதான ஷிகர் தவான் இந்திய அணியின் ஒருநாள் போட்டிக்கான அணியில் மட்டும் தொடர்ந்து இடம்பெற்று கொண்டே வருகிறார். அதுமட்டுமின்ற, ரோஹித் சர்மா இல்லாத நேரத்தில் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் இடம்பெற்றுள்ளார்.

சமீபத்தில் பேட்டியளித்த ஷிகர் தவான் , அவரது ஆசையை பற்றி கூறியுள்ளார். அதில் ” என்னுடைய ஒரே நோக்கம் எபப்டியாவது 2023ஆம் ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பை போட்டிகளில் விளையாட வேண்டும். அதற்காக நான் என்னுடைய உடலை பிட்னெஸ் ஆக வைத்துக்கொண்டு வருகிறேன். என்னுடைய முழு முயற்சியையும் இந்திய அணிக்காக வெளிப்படுத்தேன் என்று கூறியுள்ளார் தவான்.”

இதுவரை மொத்தமாக 156 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஷிகர் தவான் 6575 ரன்களை அடித்துள்ளார். அதாவது ஒரு போட்டிக்கு 46 ரன்கள் என்ற விகிதத்தில் விளையாடி வருகிறார். அதில் 17 சதமும், 38 அரைசதமும் அதில் அடங்கும். அதுமட்டுமின்றி, ஒருநாள் போட்டிக்கான தொடரில் ஷிகர் தவான் அதிகபட்சமாக 143 ரன்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here