இதை செய்ய நான் முன்பே முடிவு செய்துவிட்டேன் ; என்னுடைய பிளான் இதுதான் ; சூர்யகுமார் யாதவ் ஓபன் டாக் ;

0

ஆசிய கோப்பை 2022 போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நான்கு போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. அதில் குரூப் ‘ஏ’ பிரிவில் இந்திய கிரிக்கெட்டை அணியும், குரூப் ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான் அணியும் சூப்பர் 4 லீக் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

நான்காவது போட்டியின் சுருக்கம் :

நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஹாங் காங் கேப்டன் முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் ஆட்டம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாவிட்டாலும், நிதானமாக ரன்களை அடித்து வந்தனர்.

ஆனால் விராட்கோலி மற்றும் சூரியகுமார் யாதவின் பார்ட்னெர்ஷிப் மிகவும் முக்கியமான ஒன்றாக மாறியது. ஆமாம், இறுதி ஓவர் வரை விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி 2 விக்கெட்டை இழந்த நிலையில் 192 ரன்களை அடித்தனர். அதில் கே.எல்.ராகுல் 36, ரோஹித் சர்மா 21, விராட்கோலி 59, சூரியகுமார் யாதவ் 68 ரன்களை அடித்துள்ளனர்.

பின்பு 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ஹாங் காங். ஆனால் தோல்வி தான் காத்திருந்தது. ஏனென்றால் தொடக்க ஆட்டம் அவர்களுக்கு அமையாத காரணத்தால் பின்னடைவை சந்தித்தது வந்தனர். இருப்பினும் ஹ, ஸிஸ்யாத், ஷா மற்றும் ஜீஷன் போன்ற வீரர்களின் அதிரடியான விளையாடினார்கள்.

இறுதிவரை போராடிய ஹாங் காங் அணி 5 விக்கெட்டை இழந்த நிலையில் 152 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனால் 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது இந்திய கிரிக்கெட் அணி. அதுமட்டுமின்றி சூப்பர் 4 லீக் சுற்றுக்கு முன்னேறியுள்ளது இந்திய அணி.

இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணம் சூரியகுமார் யாதவ் தான். தொடர்ந்து சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை விளாசி வந்துள்ளார் சூர்யா. 26 பந்தில் 68 ரன்களை விளாசியுள்ளார். போட்டி முடிந்த பிறகு பேசிய சூர்யகுமார் யாதவ் கூறுகையில் ; “நான் இன்று விளையாடிய ஷாட்ஸ் அனைத்தும் நான் முன்கூட்டியே முடிவு செய்தது தான்.”

“டி-20 போட்டி என்றால் நாம் என்ன யோசனை செய்கிறோம், அதனை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதில் தான் போட்டியே உள்ளது. இந்த போட்டியில் விக்கெட் சற்று மெதுவாக தான் இருந்தது. ஆனால் என்னுடைய பிளான் சரியாக இருந்தது. பேட்டிங் செய்ய போன பிறகு கொஞ்சம் பொறுமையாக விளையாடி பின்னர் அதிரடியாக விளையாட வேண்டுமென்பது தான்.”

“எப்பொழுதும் எந்த இடத்தில் பேட்டிங் செய்தாலும் என்னால் ரன்களை அடிக்க வேண்டும், அந்த தன்மை மிகவும் முக்கியமானது. நான் தொடக்க வீரராகவும் விளையாடியுள்ளேன் என்று கூறியுள்ளார் சூரியகுமார் யாதவ்.” இப்பொழுது இருக்கும் இந்திய அணியில் இவரது பங்களிப்பு நிச்சியமாக டி-20 போட்டிகளில் தேவைப்படுகிறது.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here