HomeTrending Newsஇதனால் தான் சவுத் ஆப்பிரிக்கா அணி தொடரை கைப்பற்றியதற்கு முக்கியமான காரணம் இதுதான் ; விராட்கோலி...

இதனால் தான் சவுத் ஆப்பிரிக்கா அணி தொடரை கைப்பற்றியதற்கு முக்கியமான காரணம் இதுதான் ; விராட்கோலி பேட்டி ;

சவுத் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய அணிக்கு இடையேயான போட்டிகள் வெற்றிகரமாக முடிந்துள்ளது. அதில் 2 – 1 என்ற கணக்கில் சவுத் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றதால் தொடரை கைப்பற்றியது இந்திய கிரிக்கெட் அணி.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டனான விராட்கோலி முதலில் பேட்டிங் செய்து அதிக ரன்களை அடிக்கலாம் என்று முடிவு செய்தார். ஆனால் இந்திய அணிக்கு நேர் எதிர்மாறாக நடந்துள்ளது தான் உண்மை. முதல் இன்னிங்ஸ் – ல் களமிறங்கிய இந்திய அணி 223 ரன்களை அடித்த நிலையில் சுருண்டது. பின்னர், தென்னாபிரிக்கா அணி முதல் இன்னிங்ஸ்-ல் 210 ரன்களை அடித்தது.

அதனால் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி முன்னிலையில் இருந்தது இந்திய. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸ்-ல் மிகவும் மோசமான பேட்டிங் செய்த இந்திய அணி 198 ரன்களை அடித்துள்ளது. அதில் ரிஷாப் பண்ட் மட்டுமே அதிகபட்சமாக 100 ரன்களை அடித்தார். அதுவும் இறுதி வரை ஆட்டம் இழக்காமல். அதனால் நிச்சியமாக எதிர் அணியின் பேட்ஸ்மேன்களுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கும்.

ஆனால் அப்படி நடக்கவில்லை. ஏனென்றால் வெறும் 3 விக்கெட்டை இழந்த நிலையில் 212 ரன்களை அடித்து வெற்றியை கைப்பற்றி தொடரையும் கைப்பற்றியது தென்னாபிரிக்கா அணி. அதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியே மிஞ்சியது. போட்டி முடிந்த பிறகு இந்திய அணியின் கேப்டனான விராட்கோலி அளித்த பேட்டியில் ;

முதல் போட்டியில் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை விளையாடினோம். ஆனால் தென்னாபிரிக்கா அணி அதற்கு சரிசமமாக இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வெற்றி பெற்றுள்ளனர். சில முக்கியமான நேரங்களில் நாங்கள் சில தவறை செய்துள்ளோம். ஆனால் தென்னாபிரிக்கா அணி எல்லா நேரங்களிலும் சிறப்பாக விளையாடி வெற்றியை கைப்பற்றியுள்ளனர். இந்த வெற்றி அவர்களுக்கு தேவையான ஒன்று தான்.

எங்களுது தோல்வி சரியாக சொல்ல வேண்டுமென்றால் பேட்டிங் செய்த 30 முதல் 45 நிமிடங்கள் ஆக தான் இருக்க முடியும். அந்த நேரங்களில் சரியாக பேட்டிங் செய்திருந்தால் வெற்றி பெற்று இருக்க முடியும். எதிர் அணியின் (தென்னாபிரிக்கா) வீரர்கள் சிறப்பாக தான் பவுலிங் செய்தனர். ஆனால் இருந்தாலும் எங்கள் (இந்திய) அணியிலும் பேட்டிங் செய்வதில் சொதப்பல் ஏற்படுத்தியுள்ளோம் என்பது தான் உண்மை.

பேட்டிங் பக்கத்தில் ஏற்படும் குறைபாடுகளை கண்டிப்பாக பார்க்க வேண்டும். ஏனென்றால் அது முக்கியமான ஒன்று டெஸ்ட் போட்டியில், நாங்கள் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணியுடன் விளையாடிய போட்டிகளில் அருமையாக விளையாடினோம். ஆனால் தென்னாபிரிக்கா அணியுடன் சரியாக விளையாடவில்லை. அதற்கு மாற்றாக தான் நடந்துள்ளது.

கே.எல்.ராகுல் ,மயங்க் அகர்வால் ஆகிய இருவரும் அருமையான தொடக்க ஆட்டத்தை ஏற்படுத்தியுள்ளனர். பின்னர் , ரிஷாப் பண்ட் இறுதி போட்டியில் அருமையாக விளையாடியுள்ளார். இதனை தான் நல்ல விஷயமாக கருத வேண்டும், என்று கூறியுள்ளார் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img