CSK -யின் தொடர் வெற்றிக்கு இவர் தான் காரணம்… ! வேறு யாரும் இல்லை…! சேவாக் அதிரடி பேட்டி..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கியமான பல வெற்றிகளுக்கு இவர் தான் .. ! அதுவும் இதனால் தான் வெற்றியை கைப்பற்றி கொண்டே வருகிறார்கள் என்று கூறியுள்ளார் சேவாக்…!

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த படி ஐபிஎல் 2021 போட்டிகள் ஆரம்பித்து சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோசத்தில் உள்ளனர். கடந்த போட்டியில் வார்னர் தலைமையிலான சன்ரைஸ்சர்ஸ் ஹைதெராபாத் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற சன்ரைஸ்சர்ஸ் ஹைதெராபாத் அணியின் கேப்டன் வார்னர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங் செய்த சன்ரைஸ்சர்ஸ் ஹைதெராபாத் அணிகக்கு தொடக்க ஆட்டம் சரியாக அமையவில்லை என்றாலும் வார்னர் மற்றும் மனிஷ் பாண்டேவின் பார்ட்னெர்ஷிப் ஆட்டம் அதிரடியாக இருந்தது. அதனால் சன்ரைஸ்சர்ஸ் ஹைதெராபாத் அணி நிர்ணயக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 171 ரன்களை எடுத்துள்ளனர். .

பின்னர் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் 75 ரன்கள் மற்றும் டுபலஸிஸ் 56 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனர். அதன் பின்னர் பேட்டிங் செய்த மொயின் 7 ரன்கள், சுரேஷ் ரெய்னா 17 மற்றும் ரவீந்திர ஜடேஜா 7 ரன்களை எடுத்துள்ளனர். இதில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டுபலஸிஸ் ஆகிய இருவரின் அதிரடியான ஆட்டத்தால் 18.3 ஓவரில் வெற்றியை கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியளில் முதல் இடத்திலும், தோல்வியடைந்த சன்ரைஸ்சர்ஸ் ஹைதெராபாத் அணி இறுதி இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஆண்டு ஐபிஎல் 2020 போட்டியில் மோசமான போட்டிகளை எதிர்கொண்டது. ஆனால் இந்த ஆண்டு அதற்கு எதிர்மாறாக உள்ளது.

சமீபத்தில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக் அளித்த பேட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடர் வெற்றியை பற்றி பேசியுள்ளார். அதில் தோனியின் செயல் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு காரணமாக உள்ளது. ஏனென்றால் அணியில் உள்ள எல்லாரையும் சரியான முறையில் பயன்படுத்தி வருகிறார். அதனால் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் அதிக ரன்களையும், அதே சமையத்தில் எதிர் அணியின் விக்கெட்டையும் சுலபமாக கைப்பற்ற முடிகிறது என்று கூறியுள்ளார் சேவாக்.

ஐபிஎல் போட்டி என்றால் குறைந்தபட்ச ஓவர் தான் (20 ஓவர்). அதனால் அதில் முழுதிறமையும் வெளிப்படுத்த வேண்டும். ஐபிஎல் போட்டியில் உள்ள நிறைய அணிகள் செய்து வருகின்ற தவறை உணர்ந்த தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சிறப்பான முறையில் அனைவருக்கும் வாய்ப்பு கொடுத்து ! வருகிறார்..!! என்று கூறியுள்ளர் முன்னாள் இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் சேவாக்…!