Advertisement
HomeTrending Newsஇந்திய வீக்னஸ் இதுதான், அதனால் தான் இவருக்கு வாய்ப்பு கொடுத்தோம் ; நிக்கோலஸ் பூரான் ஓபன்...

இந்திய வீக்னஸ் இதுதான், அதனால் தான் இவருக்கு வாய்ப்பு கொடுத்தோம் ; நிக்கோலஸ் பூரான் ஓபன் டாக் ;

இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டி-20 போட்டிக்கான தொடர் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதிலும் சில நாட்களுக்கு முன்பு நடந்த ஒருநாள் போட்டியில் 3- 0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வாஷ் அவுட் செய்தது இந்திய.

அதனை தொடர்ந்து இப்பொழுது இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான டி-20 போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளனர். இன்று மூன்றாவது டி-20 போட்டி வார்னர் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்து வருகின்றனர். 14 ஓவர் முடிவில் 99 ரன்களை அடித்துள்ளனர். அதுமட்டுமின்றி, ஒரு விக்கெட்டை இழந்த நிலையில் இந்திய அணியின் பவுலிங் மோசமான நிலையில் உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங்கை சமாளிக்க முடியாமல் திணறிக்கொண்டு வருகிறது இந்திய. அதில் மாயேர்ஸ் 45 பந்தில் 61 ரன்களை விளாசியுள்ளார். அதுமட்டுமின்றி நிக்கோலஸ் பூரான் மற்றும் மாயேர்ஸ் சிறப்பாக பார்ட்னெர்ஷிப் செய்து விளையாடி வந்தனர்.

டாஸ் போட்ட பிறகு பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனான நிக்கோலஸ் பூரான் ; இந்திய அணிக்கு எதிரான போட்டியில் நடந்த மாற்றத்தை கூறியுள்ளார். அதில் எங்களுக்கு இந்த முறை மேடுஹல் பேட்டிங் செய்வதை தான் எதிர்பார்த்தோம். இருப்பினும் இந்த மைதானத்தில் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு தான் சாதகமாக இருக்கும்.”

“இருப்பினும் எங்கள் அணியால் முடிந்த ரன்களை அடிக்க நினைக்கிறோம். எங்கள் அணியில் இருக்கும் பவுலர்களுக்கு தான் பெருமை சேரும். அதுமட்டுமின்றி , நாங்கள் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இடது கை வேகப்பந்து வீச்சாளர்களை அதிகமாக விளையாட வைக்க நினைத்தோம். “

“அதனால் எங்கள் அணியில் ஸ்மித்-க்கு பதிலாக டோமினிக் ட்ராக்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார். எப்பொழுது அணி வீரர்களை எந்த சூழ்நிலையாக இருந்தாலும் அவர்களுக்கு தைரியத்தை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் நிக்கோலஸ் பூரான். “

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular